»   »  அப்படித் தான் தொடையை காட்டுவேன், இப்ப என்ன செய்வீங்க: பிரியங்கா சோப்ரா

அப்படித் தான் தொடையை காட்டுவேன், இப்ப என்ன செய்வீங்க: பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பெர்லின் நகரில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தார். இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

ஹாலிவுட் படமான பேவாட்ச்சை விளம்பரம் செய்ய பிரியங்கா பெர்லின் சென்றுள்ளார்.

 பிரியங்கா

பிரியங்கா

பிரதமர் மோடியை பெர்லினில் சந்தித்ததை பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் தெரிவித்தார். மேலும் மோடியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.

கிண்டல்

கிண்டல்

கால் தெரியும்படி உடை அணிந்து பிரதமர் முன்பு அதுவும் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமலா உட்கார்ந்திருப்பது என்று நெட்டிசன்கள் பிரியங்காவை வறுத்தெடுத்தனர்.

 கலாச்சாரம்

கலாச்சாரம்

ஒரு நாட்டின் பிரதமரை சந்திக்கும்போது ஒழுங்காக நம் கலாச்சாரப்படி உடை அணிய வேண்டாமா? நீங்கள் பெரிய ஸ்டாராக இருக்கலாம் ஆனால் பெரியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டாமா என்று ஆளாளுக்கு பிரியங்காவை சமூக வலைதளத்தில் திட்டினார்கள்.

 புகைப்படம்

புகைப்படம்

கால் தெரியும்படி உடையணிந்ததை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தானும், தனது தாயும் கால் தெரியும்படி உடையணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இது ரத்தத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா.

English summary
Bollywood actress Priyanka Chopra has taken sweet revenge against haters who troll her for not dressing properly while meeting PM Modi in Berlin.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil