»   »  'காய்ச்சி' கலக்கும் ராதா!!

'காய்ச்சி' கலக்கும் ராதா!!

Subscribe to Oneindia Tamil
Click here for more images

காத்தவராயன் படத்தில் ஹீரோ கரண், ஹீரோயின் விதிஷாவை விட கள்ளச்சாராய வியாபாரியாக வரும் ராதாதான் கலக்கி எடுக்கப் போகிறார். அந்த அளவுக்கு கிளாமரையும், போதையையும் சேர்த்து கொடுத்து அசத்தப் போகிறார் ராதா.

முதல் மரியாதை ராதா ரொம்ப நாளைக்கு தமிழ் சினிமாவைக் கலக்கினார். ஆனால் காத்தவராயன் ராதா குறுகிய காலமே தமிழ் சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியவர்.

சுந்தரா டிராவல்ஸ் படம்தான் ராதாவுக்கு முதல் படம். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்த ராதா, அதன் பின்னர் எடுபடாமல் போய் விட்டார். ராதா சூப்பர் நடிகையாக வராமல் சாதாவாகப் போனதற்கு அவர் ஷூட்டிங்கின் போது செய்த பல குழப்பங்கள்தான் காரணம் என்கிறார்கள். இடையில் அவர் தயாரிப்பாளர் ஒருவர் மீது கூட புகார் கூறியது நினைவிருக்கலாம்.

கேரளத்தைச் சேர்ந்தவரான ராதா இடையில் ரகசியமாய் கல்யாணமாகி செட்டிலானதாகக் கூட கிசுகிசுக்கப்பட்டது.

இப்படிக் குழப்பங்களின் மொத்த உருவமாக ராதா இருந்ததால் அவரை வைத்துப் படம் எடுக்க யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில்தான் காத்தவராயன் படத்தில் அவருக்கு அட்டகாசமான கேரக்டர் தேடி வந்தது.

கள்ளச்சாராய வியாபாரியாக இந்தப் படத்தில் ராதா நடிக்கிறார். ஏறக் கட்டிய சேலையும், சேலைத் தலைப்பை பின்னால் செருகாமல், முன்னால் விட்டு, கலக்கல் கிளாமருடன் இந்தப் படத்தில் நடிக்கிறாராம் ராதா.

அவரிடமிருந்து நடிப்பு பிறக்கிறதோ இல்லையோ, கிளாமர் தூள் பறக்கிறதாம். ஹீரோயினைப் போலவே ராதாவுக்கும் முக்கியமான கேரக்டராம்.

இப்படிப்பட்ட ரோலில் நடிக்கிறீர்களே என்று யாராவது கேட்டால், பிதாமகன் படத்தில் சங்கீதா கஞ்சா விற்பவராக நடித்தார். யாருமே அதை குற்றம் சொல்லவில்லையே. மாறாக அந்தப் படம் சங்கீதாவுக்கு மறு பிறவியைக் கொடுத்தது.

அதுபோலத்தான் இந்த கேரக்டரும். கிட்டத்தட்ட சங்கீதா நிலையில்தான் நானும் உள்ளேன். இந்தப் படம் மூலம் எனக்கும் நல்ல பிரேக் கிடைக்கும் என நம்புகிறேன்.

கிளாமர் என்பது பார்க்கும் பார்வையில்தான் உள்ளது. சாதாரண சிரிப்பால் கூட கிளாமரைக் காட்ட முடியும் (அட்ரா, அட்ரா). எனது நடிப்பு கிளாமர் என்றால் எனக்கு முன்பு இதுபோன்ற கேரக்டர்களில் நடித்த நடிகைகளின் நடிப்பும் கிளாமர்தான் என்று பலே தத்துவமாக பேசுகிறார் ராதா.

நடிப்புலக தாதாவாக மாற ராதாவை வாழ்த்துவோம்.

Read more about: kaathavarayan, karan, radha
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil