»   »  தீபிகா இல்லை, சோனாக்‌ஷியும் இல்லை... ரஜினியின் அடுத்த ஜோடி ராதிகா ஆப்தே?

தீபிகா இல்லை, சோனாக்‌ஷியும் இல்லை... ரஜினியின் அடுத்த ஜோடி ராதிகா ஆப்தே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிங்கா படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. ஆகஸ்ட் மாதத்தில் மலேசியாவில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே அல்லது சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கலாம் எனக் கூறப்பட்டது. இருவரும் ஏற்கனவே ரஜினியுடன் ஒரு படத்தில் நடித்துள்ளனர்.

ராதிகா ஆப்தே...

ராதிகா ஆப்தே...

ஆனால், தற்போது ரஜினி ஜோடியாக நடிக்க ராதிகா ஆப்தே-வை படக்குழு அணுகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராதிகா ஆப்தே ஏற்கனவே தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் சாயல்...

ஐஸ்வர்யா ராய் சாயல்...

அசப்பில் ஐஸ்வர்யா ராயை ஞாபகப் படுத்தும் ராதிகா ஆப்தே சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். சமீபத்தில் அவரது ஆபாசப் படங்கள் வாட்ஸ் அப்பில் வளைய வந்தது.

ஆபாசக் காட்சி...

ஆபாசக் காட்சி...

அதனைத் தொடர்ந்து, அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்த குறும்படம் ஒன்றில் அவரது ஆபாசக் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிப் பட நாயகி...

ரஜினிப் பட நாயகி...

இவ்வாறு சர்ச்சைகளுக்குப் பெயர் போன ராதிகா ஆப்தே, ரஜினியின் அடுத்தப் பட நாயகியாக நடிக்க உள்ளார் என்பது தான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

English summary
Actress Radhika Apte, who has worked in southern films like “Dhoni” and “Legend”, is reportedly being considered for superstar Rajinikanth’s yet-untitled 159th film, which will go on floors in Malaysia in August.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil