»   »  அய்யோ பாவம், சாமி 2 ஹீரோயின் த்ரிஷா இல்லையாமே?

அய்யோ பாவம், சாமி 2 ஹீரோயின் த்ரிஷா இல்லையாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹரி இயக்க உள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சினிமாவை விட்டு போய்விடலாமா என்ற யோசனையில் இருந்த த்ரிஷா சாமி படத்தின் வெற்றியால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்தார்.

13 ஆண்டுகள் கழித்து சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் ஹரி.

விக்ரம், த்ரிஷா

விக்ரம், த்ரிஷா

சாமி படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும் அதில் நடித்த விக்ரமும், த்ரிஷாவும் இன்னும் முன்னணி நடிகர், நடிகையாக உள்ளனர். இதனால் இரண்டாம் பாகத்திலும் இவர்களே ஜோடி சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங்

சாமி 2 படத்தில் த்ரிஷாவுக்கு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டு டோலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் ராகுல் ப்ரீத் சிங்கை விக்ரமுக்கு ஜோடியாக்க திட்டமிட்டுள்ளாராம் ஹரி.

துப்பறிவாளன்

துப்பறிவாளன்

ராகுல் ப்ரீத் சிங் விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ.ஆர். முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இருமுகன்

இருமுகன்

ஹரி இயக்க உள்ள சாமி 2 படத்தை விக்ரமின் இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். பிற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது.

English summary
Buzz is that Rahul Preet Singh will be the leading lady of Vikram's Saamy 2 to be directed by Hari.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil