»   »  ராகவா லாரன்ஸுடன் மோதல்: மெகாஸ்டார் படத்தில் இருந்து கார்த்தி நாயகி நீக்கம்

ராகவா லாரன்ஸுடன் மோதல்: மெகாஸ்டார் படத்தில் இருந்து கார்த்தி நாயகி நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸுடன் மோதியதால் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் கேத்ரீன் தெரஸா.

அரசியலில் பிசியாக இருந்த சிரஞ்சீவி ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் இளைய தளபதி விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த படத்திற்கு கைதி 150 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கைதி 150

கைதி 150

சிரஞ்சீவியின் 150வது படம் கைதி 150 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அவரது மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார்.

கேத்ரீன் தெரஸா

கேத்ரீன் தெரஸா

கைதி 150 படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட கேத்ரீன் தெரஸாவை ஒப்பந்தம் செய்தனர். அந்த பாடலுக்கு ராகவா லாரன்ஸ் நடனம் அமைக்கிறார்.

சண்டை

சண்டை

படப்பிடிப்புக்கு வந்த கேத்ரீன் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸுடன் மோதியுள்ளார். இதை பார்த்த ராம் சரண் கேத்ரீனை படத்தை விட்டு நீக்கிவிட்டார்.

ராய் லட்சுமி

ராய் லட்சுமி

கேத்ரீன் தெரஸா நீக்கப்பட்ட பிறகு சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போட ராய் லட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர். கைதி 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். படம் வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி ரிலீஸாக உள்ளது.

English summary
Catherine Tresa has been replaced by Rai Lakshmi in Chiranjeevi's upcoming movie Khaidi No 150 after she allegedly fought with dance master Raghava Lawrence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil