»   »  ராஜ்ஸ்ரீ போடும் ஆட்டம்

ராஜ்ஸ்ரீ போடும் ஆட்டம்

Subscribe to Oneindia Tamil

பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியை நம்பி ரொம்பவே பொறுமையாக இருந்துபார்த்தார் கருத்தம்மா ராஜ்ஸ்ரீ. ஆனால், தமிழ் சினிமா அவரை மறப்பதிலேயே குறியாய் இருந்தது.

இதையடுத்து தனது தங்கை சோனாவையும் கூட்டிக் கொண்டு தயாரிப்பாளர்களின்அலுவலகங்களிலும், இயக்குனர்களிலும் வீடுகளிலும் படியேறி இறங்கினார். சோனாவுக்கும்தனக்குமாக சான்ஸ் கேட்டுப் பார்த்தார்.

ஏதும் தேறவில்லை. இதையடுத்து சோனா கன்னட பக்கமாய் துண்டு, துக்கடா அணிந்து நடிக்கும்துண்டு வேடங்களில் தோன்றப் போய் விட்டார்.

ராஜ்ஸ்ரீ தொடர்ந்து நம்பிக்கையுடன் கோடம்பாக்கத்தையே சுற்றிச் சுற்றி வந்தார். ஆனால்,இயக்குனர் பாலாவைத் தவிர வேறு யாரும் இவரை கண்டு கொள்ளவில்லை.

சேதுவில் மனம் பேதலித்தவராகவும், நந்தாவின் சூர்யாவுக்கு அம்மாவாகவும் ரோல் கொடுத்தார்.பிதாமனிலும் நுழைந்துவிட ராஜஸ்ரீ எவ்வளவோ முயன்றார். ஆனால், அது நடக்காமல்போய்விட்டது.


இதனால் சின்னத் திரைப் பக்கமாய் போன ராஜ்ஸ்ரீக்கு ,சினிமாவை விட்டுவிட மனமே வரவில்லை.

அடுத்து அவர் எறிந்த கல் தான் ஒரு பாட்டுக்கு டான்ஸ். ராஜ்ஸ்ரீ எப்படி டான்ஸ் ஆடுவார், நாம்நினைத்த மாதிரி காட்ட மாட்டாரே என்று பலரும் அவரை ஒதுக்கித் தள்ள, தன்னைபலவிதங்களிலும் படமெடுத்து ஆல்பங்களை ஒரு ரவுண்டு விட்டார் ராஜ்ஸ்ரீ.

அட, ராஜ்ஸ்ரீயிடம் இவ்வளவு விஷயம் இருக்கா என ஆச்சரியப்பட்ட ஒரு தயாரிப்பாளர் அவரைதன் படத்தில் புக் செய்துவிட்டார். கதிர்காலம் என்ற இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ராஜ்ஸ்ரீ பின்னிஎடுத்திருக்கிறாராம் குலுக்ஸ் ஆட்டத்தில்.

ஆட்டத்தோடு மட்டுமல்லாமல் படம் முழுக்கவுமே ராஜ்ஸ்ரீ வந்து போனாலும் நல்லாத்தான்இருக்கும் என்று டைரக்டர் சொன்னதால் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நடிக்கச் சொல்லிவிட்டார்கள்.

மகிழ்ச்சியோடு நடித்துக் கொண்டிருக்கும் ராஜ்ஸ்ரீ, தனது புதிய தோற்றத்தால் ரசிகர்களையும்நிச்சயம் மகிழ்விப்பாராம்.

படத்தில் ஹீரோவாக டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியும், கதாநாயகியாக நந்திதாவும் நடிக்கின்றனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil