»   »  நான் ஓடிவிட மாட்டேன்: ரம்பா

நான் ஓடிவிட மாட்டேன்: ரம்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புகள் இல்லாததால் நான் சென்னையை விட்டு வெளியேறி விட்டதாக எனக்கு வேண்டாதவர்கள் புரளி கிளப்பி விட்டுள்ளார்கள் என்றுபுலம்புகிறார் தொடையழகி ரம்பா.

ரஜினி, கமல் முதல் விஜய், அஜீத் வரை அத்தனை பேருடனும் ஆட்டம் போட்டு விட்ட ரம்பா, இந்தியிலும் புகுந்து சிறிய அளவில் கலக்கிவிட்டு தாய்மொழியாம் தெலுங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தூங்க விடாமல் அலைய விட்டார்.

இடையில் மார்க்கெட் டல்லானதால் தேவையில்லாத வேலையாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அரசியல் அவருக்குகைகொடுக்கவில்லை. கூடவே, செக் மோசடி வழக்கு துரத்த ஆரம்பிக்க தமிழ்நாட்டை விட்டு ஓடினார்.

இந்தி, மலையாளம், வங்காளம் என பல மொழிகளிலும் நடித்து தேசிய ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டார்.

மலையாளத்தில் மெகா ஸ்டார் மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்து குரோனிக் பேச்சிலர் என்ற படத்தில் நடித்தார். படமும் நன்றாகவே ஓடியது. இதையடுத்துமலையாளத்தின் தற்போதைய சூப்பர் ஸ்டார் திலீப்புடன் கொச்சி ராஜாவு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையே வங்க மொழியிலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்ததால் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.

இந்த கேப்பில் சென்னையிலுள்ள அவரது வீடுகளையும், சொத்துக்களையும் விற்று விட்டு மும்பையில் செட்டிலாகி விட்டதாக கோலிவுட்டில் புரளியைக்கிளப்பி விட்டுள்ளார்கள்.

ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி தான், நம்பாதீங்கோ என்கிறார் ரம்பா.

சிங்கிள் பாட்டுக்கு ரம்பா ஆட்டம் போட்டுள்ள சுக்ரன் படத்திற்கு தியேட்டர்களில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதால் சற்றுதெம்பாக இருக்கிறார்.

அந்த குஷியில், நான் எங்கேயும் ஓடிவிடவில்லை. சென்னைதான் எனக்கு வாழ்வளித்தது. எனவே இங்கேயேதான் இருப்பேன். எனது வீட்டை நான் ஏன் விற்கவேண்டும்?

என் மேல் பொறாமை கொண்ட சிலர்தான் இப்படிப் புரளிகளை கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்று புலம்புகிறார் ரம்பா.

எனக்கு இந்தியாவிலேயே பிடித்த ஊர் சென்னை தான் தெரியுமா? ஐதராபாத்தில் நிறைய கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள்.

வெளியூரில் எங்கு படப்பிடிப்பு எனக்கு எப்போதுடா சென்னைக்குத் திரும்புவோம் என்று நினைக்கத் தோன்றும் என்று சென்னைப்பட்டணத்தை புகழ்ந்து தள்ளும்ரம்பா,தொடர்ந்து கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி தமிழில் இன்னொரு ரவுண்டு வர தயாராகி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil