»   »  மறுபடியும் வரும் ரம்பா

மறுபடியும் வரும் ரம்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ramba
தமிழை ஒரு காலத்தில் தனது தொடையழகால் உலுக்கிய ரம்பா பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்புகிறார்.

தொடையழகி, உடுக்கை இடையழகி என தமிழ் ரசிகர்களால் வியந்து பாராட்டப்பட்டு, பரம விசிறிகளின் ஆதரவால் கொடி கட்டிப் பறந்தவர் ரம்பா.

உள்ளத்தை அள்ளித்தா மூலம் கவர்ச்சி சிந்து பாடி, தமிழ் ரசிகர்களுக்கு கலகலப்பூட்டி வந்த ரம்பா, தேவையில்லாமல் த்ரீ ரோஸஸ் என்ற படத்தைத் தயாரித்து பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்.

அந்தப் படம் கொடுத்த பெரிய அடியால் நஷ்டமடைந்து, பட வாய்ப்புகளையும் இழந்து ஆதரவற்றோர் பட்டியலில் சேர்ந்தார்.

இதையடுத்து இந்திக்குப் போய்ப் பார்த்தார். ஒன்றும் தேறவில்லை. மிதுன் சக்கரவர்த்தியின் நட்பால் பெங்காலி மொழிப் படங்களிலும் நடித்தார். அதுவும் ரொம்ப நாளைக்கு ஓடவில்லை. இடையில் போஜ்பூரி படங்களில் நுழைந்தார்.

நக்மாவுக்கு வாழ்வு கொடுத்த போஜ்பூரி, ரம்பாவையும் ஓரளவு அரவணைத்தது.

இந்த நிலையில் மீண்டும் தமிழுக்குத் திரும்பும் காலம் வந்துள்ளது ரம்பாவுக்கு. கே.வீரா என்பவர் இயக்கும் மறுபடியும் சின்ன வீடு என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம் ரம்பா.

டைட்டிலைப் பார்த்தவுடனேயே பாதிக் கதை தெரிந்திருக்கும். இது கல்யாணத்திற்குப் பிறகு ஏற்படும் கள்ளக்காதல் குறித்த படம்தான். படத்தில் ஐந்து ஹீரோயின்களாம். ஐம்பூதங்களின் குணங்களை நினைவு கூறும் வகையில் இந்த ஐந்து ஹீரோயின்களின் கேரக்டர்களும் இருக்கும் என்கிறார் வீரா.

ஐந்தோடு வந்தால் என்ன, அசத்தலாக நடித்து விட்டால் போச்சு என்ற நம்பிக்கையுடன் ரம்பா மீண்டும் தமிழ் கூறும் நல்லுலகின் ரசிகர்களை நாடி ஓடி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil