twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதெப்படி ‘மர்தானி’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் தரலாம்... ராணி முகர்ஜி ஆவேசம்

    |

    மும்பை: தனது மர்தானி படத்தை 12 வயதுக்கு மேற்பட்டக் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அப்படத்தின் நாயகியான ராணி முகர்ஜி.

    சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலை போலீஸ் அதிகாரியான ராணி முகர்ஜி துரத்திப் பிடிப்பதுதான் மர்தானி படத்தின் கதைக்களம். கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இப்படத்திற்கு மகாராஷ்டிர மாநில அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

    பாராட்டு...

    பாராட்டு...

    இது குறித்து அம்மாநில முதல்வர் பிரித்விராஜ் சவுகான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த வாரம் உலக அளவில் வெளியான 'மர்தானி' படம் பெரும் தரப்பினரது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தான், குடும்பத்தினருடன் பார்த்ததாகவும், இந்த படம் பெண்கள் மீதான வன்கொடுமைகள் சமுதாயத்திலிருந்து ஒழிக்க கூடியவை என்று உணர்த்தக்கூடிய வகையில் உள்ளதாகவும்' பாராட்டியுள்ளார்.

    வாழ்த்து...

    வாழ்த்து...

    மேலும், இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள ஆதித்யா சோப்ராவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள சவான், இந்த படத்திற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வரி விலக்கு அளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

    வருத்தம்...

    வருத்தம்...

    இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் போர்டு ஏ தரச் சான்றிதழ் அளித்துள்ளதால் குழந்தைகள் பலர் இப்படத்தைப் பார்க்க இயலவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகை ராணி முகர்ஜி. இதனால், என்.ஜி.ஓக்களைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சிலர் இப்படத்தை மீண்டும் சென்சார் செய்ய கோரிக்கை விடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    மகிழ்ச்சி...

    மகிழ்ச்சி...

    மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘மர்தானிக்கு மக்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவு குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிறைய நண்பர்கள் எனக்கு போன் செய்து இந்தப் படத்திற்கு ஏன் ஏ தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது என கேட்கிறார்கள்.

    விழிப்புணர்வுப் படம்...

    விழிப்புணர்வுப் படம்...

    குழந்தைகள் கடத்தலை மையமாகக் கொண்ட இப்படம் வளரும் குழந்தைகளுக்கு நிச்சயமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. எனவே, இப்படத்தை மீண்டும் சென்சார் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறேன்.

    ஏமாற்றம்...

    ஏமாற்றம்...

    ஏன் இந்தப் படத்தை சிறுவர்கள் பார்க்கக் கூடாது என சென்சார் போர்டு நினைக்கிறது எனத் தெரியவில்லை. இது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    டிவிடிக்காக காத்திருப்பு...

    டிவிடிக்காக காத்திருப்பு...

    என்னுடைய நண்பர்கள் பலர் இந்தப் படத்திற்கு தங்களது பிள்ளைகளையும் அழைத்துப் போய் காட்ட முடியவில்லையே என என்னிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் டிவிடி வெளியானதும் அவற்றைத் தங்களது குழந்தைகளுக்குப் போட்டுக் காண்பிக்க உள்ளதாகவும், அதற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    மீண்டும் சென்சார்...

    மீண்டும் சென்சார்...

    எனது நண்பர்களில் சிலர் என்.ஜி.ஓ.க்களில் உள்ளனர். அவர்கள் தங்களது தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு இப்படத்தை போட்டு காண்பிக்க இயலாததால், இப்படத்தை மீண்டும் சென்சார் செய்ய வலியுறுத்தும் முடிவில் உள்ளனர்.

    நல்ல கருத்துக்கள்...

    நல்ல கருத்துக்கள்...

    எனவே அவர்களிடமிருந்து கடிதம் பெற்று அதனை சென்சார் போர்டுக்கு விண்ணப்பிக்கும் முடிவில் இருக்கிறேன். இப்படம் குழந்தைகளுக்கு நிறைய நல்ல கருத்துக்களைச் சொல்லும் என நான் நம்புகிறேன்.

    நாங்கள் நினைத்திருந்தால்...

    நாங்கள் நினைத்திருந்தால்...

    ஏன் உண்மையைப் பார்த்து நாம் வெட்கப்பட்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும். இப்படத்தின் சில காட்சிகளை நீக்கியிருந்தால் எங்களுக்குச் சுலபமாக சென்சார் போர்டிடம் இருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கும்.

    எங்கள் நோக்கம்...

    எங்கள் நோக்கம்...

    ஆனால், அதை நாங்கள் விரும்பவில்லை. 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    An 'A' certificate keeps a large chunk of the young audience away from theatres. Rani Mukerji says she’s trying for a U/A certificate for her film Mardaani so that the youngsters above 12 can watch and learn from the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X