Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இத்தாலியில் காதலரை ரகசியமாக மணந்த நடிகை ராணி முகர்ஜி
ரோம்: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது காதலர் ஆதித்யா சோப்ராவை ரகசிசயமாக திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும், மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான யஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்யா சோப்ராவை காதலித்து வந்தார். ஆதித்யா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர்.
ஆதித்யாவும், ராணியும் காதலித்தது பாலிவுட் அறிந்த கதை.

காதல்
ஆதித்யாவும், ராணியும் தங்கள் காதலை பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தனர். அவர்களை பொறுத்த வரை தான் அது ரகசியம். ஆனால் பாலிவுட்டில் அனைவருக்கும் அவர்கள் விவகாரம் பற்றி தெரியும்.

சத்ருகன் சின்ஹா
யஷ் சோப்ரா மறைவுக்கு பிறந்த நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா மேடையில் பேசுகையில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார். அது ராணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

கல்யாணம்
ராணியும், ஆதித்யாவும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகவும் ராணியின் மார்க்கெட் பாதிக்காமல் இருக்க அதை வெளியே தெரிவிக்காமல் இருப்பதாகவும் பாலிவுட்டில் பேச்சு அடிபட்டது.

எப்பொழுது?
ஆதித்யா, ராணி முகர்ஜி எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வார்களோ என்று பாலிவுட்டில் பலரும் கேட்கத் துவங்கிவிட்டனர்.

ஒருவழியாக
இத்தனை நாட்களாக இழுத்தடித்த ஆதித்யாவும், ராணியும் ஒருவழியாக நேற்று இரவு இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.