»   »  மீண்டும் பழைய தொழிலில் ரதி

மீண்டும் பழைய தொழிலில் ரதி

Subscribe to Oneindia Tamil

நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதால் பிரபல நடிகைகளுக்கு மீண்டும் டப்பிங் கொடுக்கத் தொடங்க விட்டார் ரதி.

பெங்களூரில் பிறந்து, வளர்ந்தவர் ரதி. ஆனால் அப்பா, அம்மா இருவரும் தமிழர்கள் என்பதால் அட்சர சுத்தமாக தமிழ் பேசத் தெரியும்.இதனால் சினிமாவில் டப்பிங் வாய்ஸ் கொடுத்து வந்தார்.

அதோடு குடும்பப் பாங்கான முகவெட்டு, ஸ்லிம்மான உடல் என ப்ளஸ் பாயிண்ட்களை கக்கத்தில் வைத்துக் கொண்டு, சொல்ல மறந்த கதைபடத்தில் இவர் அறிமுகமானார்.

முதல் படம் என்பதே தெரியாமல் அவ்வளவு இயல்பாக நடித்து, அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். அடுத்து தமிழ் சினிமாவில்பெரிய ரவுண்டு வருவார் என எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால் சில படங்களுடன் அவரது சுற்று முடிந்து விட்டது.

தமிழ் தெரிந்தவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக முடியாது என்பது இப்போது கோடம்பாக்கத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறதே.அதற்கு ரதியும் தப்ப முடியவில்லை. சொல்ல மறந்த கதைக்குப் பிறகு, எங்கே எனது கவிதை படத்தில் குணாலுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இப்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அசோக் கோத்வானி எங்கே எனது காசு என்று தேடிக் கொண்டிருக்கிறார். படம் அட்டர் பிளாப்.

அடுத்து நடித்த கும்மாளம், பல்லவன் படங்களும் பெரிதாக ஊத்திக் கொள்ள ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார். ரொம்பநாள் சும்மாவே இருந்தவர், கடைசியாக நடித்த அடிதடி படத்தில் சத்யராஜுடன் குத்தாட்டம் போட்டு பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

இப்போது சுத்தமாக கையில் படமே இல்லை. இதனால் பிரபல நடிகைகளுக்கு மீண்டும் டப்பிங் கொடுக்க வந்து விட்டார். இப்போதுரக்ஷிதா, ரம்யா ஆகியோருக்கு குரல் கொடுப்பது ரதிதானாம்.

உடல் நடிக்காவிட்டாலும், குரல் நடிக்கிறதே என்று ரதி சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil