ரொம்ப அப்செட் ஆகிட்டேன்.. கூலி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ரெபா மோனிகா ஜான்.. அடிமேல் அடி!

சென்னை: லியோ படத்தில் தன்னை சரியாக லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தவில்லை என சஞ்சய் தத் கேடி படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூலி படத்தில் நடித்ததால் தான் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டதாக நடிகை ரெபா மோனிகா ஜான் ரசிகர்களுடன் நடத்திய சாட்டின் போது பேசியது வைரலாகி வருகிறது.

விஜய்யின் பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் அனிதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சிங்கப்பெண் தான் ரெபா மோனிகா ஜான். பிகில் படத்தை போலவே கூலி படத்திலும் இவருக்கு சின்ன ரோல் தான் என்றாலும் பிகில் படம் அளவுக்கு எந்தவொரு இம்பேக்ட்டும் இல்லாத கதாபாத்திரமாக அது அமைந்துவிட்டது.

Reba Monica John expresses her dissappointment on working in Rajinikanth s Coolie movie
Photo Credit:

லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அமீர்கான் பேசியதாக வதந்திகள் கிளம்பிய நிலையில், தற்போது ரியலாகவே நடிகை ரெபா மோனிகா ஜான் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகை ரெபா மோனிகா ஜான்: கடந்த 2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜாகோபிண்டே சுவர்கராஜ்யம் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தில் ஹீரோயினாக நடித்தார். பிகில் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனுசு ராசி நேயர்களே, எஃப்ஐஆர், பூ, மழையில் நனைகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்த ரெபா மோனிகா ஜான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருந்தார்.

ரொம்ப அப்செட் ஆகிட்டேன்: லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படம் எல்சியூ எல்லாம் கிடையாது என்றும் இது தலைவருக்காக தனியாக செதுக்கிய ஸ்டாண்ட் அலோன் படம் என்றார். கடைசியில், ஏகப்பட்ட ஸ்டாண்டப் காமெடியன் வரை கலாய்க்கும் படமாக மாறிவிட்டது. இந்நிலையில், கூலி படத்தில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான் கூலி படத்தில் நடித்ததில் ரொம்பவே அப்செட் ஆகிட்டேன், எனக்கு அது ஏமாற்றம் தான். நிறைய காட்சிகள் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதுதான் சினிமா எதையும் நாம் முடிவு செய்ய முடியாது. ஆனாலும், தலைவர் படத்தில் ஒரு சின்ன ரோலில் இருந்ததே ரொம்ப சந்தோஷம் தான். கூலி பட்த்தில் நடித்ததற்காக பலரும் பாராட்டி மெசேஜ் போட்டிருந்தீங்க, அதற்கெல்லாம் நான் தகுதியானவளாக எதையும் செய்யவில்லை. ஆனால், மகிழ்ச்சி என்றார்.

அப்போ அப்படி.. இப்போ இப்படி: கூலி படத்தில் எப்படியாவது வாய்ப்பை பெற்று விட வேண்டும் என ரெபா மோனிகா ஜான் எடுத்த முயற்சிகள் குறித்தும் கூலி படம் வெளியாவதற்கு முன்பு அளித்த பேட்டியில், தன்னுடைய கதாபாத்திரம் ரொம்பவே சர்ப்ரைஸ் ஆன ஒன்று என்றும் ரஜினி சார் ஃபைட் சீனில் நான் இருக்கிறேன் என பில்டப் எல்லாம் கொடுத்து பேசியிருந்தாரே இப்போ இப்படி பேசுறாரே என லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ரெபா மோனிகா ஜானை ட்ரோல் செய்து வருகின்றனர். அடுத்து விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் இவர் சின்ன ரோலில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X