»   »  டப்பை ஏற்றிய ரீமா

டப்பை ஏற்றிய ரீமா

Subscribe to Oneindia Tamil

ரீமா சென் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விட்டார். ஏற்றிய கையோடு தெலுங்குப் பக்கம் தாவி விட்டார்.

மின்னலே மூலம் தமிழில் அறிகமான ரீமா சென் கதாநாயகியாக நடிப்பதில் ஆர்வமே காட்டவில்லை.

கொடுக்க வேண்டிய காசை மட்டும் கொடுத்தால் போதும், எந்த ரோலும் செய்வேன் என்ற நிலையில் தான் இருந்தார். இதனால் இதுவரைதமிழில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் கவர்ச்சியை மையமாக வைத்தே வெளி வந்தன.

எல்லா மும்பை நடிகைகளும் கதாநாயகியாக நடிப்பதில் ஆர்வம் காட்ட இவர் மட்டும் தூள், ஜே.ஜே. ஆகிய படங்களில் கவர்ச்சிப்பதுமையாக வந்துபோனார்.

கவர்ச்சி வேடம் மட்டுமில்லை, கதாநாயகியாக நடிக்கும்போது கூட பெரிய ஸ்டாருடன்தான் நடிப்பேன், புதுமுகங்களுடன் நடிக்கமாட்டேன் என்று பிகு பண்ணுவதில்லை.

நமக்குத் தேவை காசு, அது கிடைத்தால் யாருடனும் நடிப்பதற்குத் தயார் என்ற கொள்கையுடையவர் ரீமா.


அப்படித்தான் செல்லமே படத்தில் புதுமுகம் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் கவர்சி பிளஸ் நடிப்பு என்றுகலக்கியிருந்தார்.

சமீபத்தில் செல்லமே படத்திலும், கிரி படத்திலும் அவரது கவர்ச்சி பிளஸ் நடிப்பு பேசப்பட்டது. அதிலும் கிரியில் ஓவராகவே தாராளமாய்வந்து போனார். இதனால் கோலிவுட்டில் ரீமாவுக்கு செம டிமாண்ட்.


இந்த டிமாண்டை பயன்படுத்தி நாலு காசு பார்க்கத் திட்டமிட்ட ரீமா தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விட்டார்.

35 லட்சம் தந்தால்கால்ஷீட் தருகிறேன் என்கிறார்.

இதனால் தமிழ் தயாரிப்பாளர்கள் சைலன்ட்டாக திரும்பத் தொடங்கினர். ஆனாலும் ரீமா இறங்கி வரவில்லை. 35 லட்சத்திற்கு ஒரு பைசாகுறைந்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவருகிறார்.

இதனால் இப்போது தமிழில் படங்கள் குறைய ஆரம்பித்துள்ளன. இருந்தாலும் கவலைப்படாத ரீமா வண்டியை அப்படியே தெலுங்குப்பக்கம் திருப்பியுள்ளார்.

டப்பு பற்றி கவலைப்படாத தெலுங்குப் படவுலகம் ரீமாவுக்கு ரெட் கார்பெட் போட்டு வரவேற்புக் கொடுத்துள்ளது. அங்கு சில படங்களில்கவர்ச்சியை பிரதானமாக வைத்து நடிக்கப் போகிறாராம் ரீமா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil