»   »  'ஆயிரத்தில்'... நம்பிக்கையில் ரீமா

'ஆயிரத்தில்'... நம்பிக்கையில் ரீமா

Subscribe to Oneindia Tamil
Reemasen
 'ஆயிரத்தில்'... நம்பிக்கையில் ரீமா: ஆயிரத்தில் ஒருவன் தன்னை பெரிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று ரீமா சென் நம்பிக்கையோடு பேசுகிறார்.

மின்னலே வந்தபோது ரீமா சென் பெரிய அலையை எழுப்பினார். அந்த அலை அவ்வப்போது ஓயும், பின்னர் அதிரடியாக பாயும். குறைந்த படங்ளிலேயே இதுவரை ரீமா நடித்திருந்தாலும், அவர் நடித்த அனைத்துப் படங்களிலும் பெரியளவில் பேசப்பட்டுள்ளார்.

அழகான நடிப்பு, அருமையான டான்ஸ், செக்ஸி அப்பீல் என கலக்கல் கலவையாக இருக்கும் ரீமா இப்போது செல்வராகவன் இயக்கத்தில், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பருத்தி வீரன் கார்த்தியோடு ஜோடி போட்டிருக்கும் ரீமா, இப்படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

முதல் கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டப்படிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

ஆயிரத்தில் ஒருவன் குறித்து ரீமாவிடம் கேட்டால் முகம் மலர நிறையப் பேசுகிறார்...

எனக்கான வாய்ப்புகள் ஒருபோதும் என்னை விட்டுப் போனதில்லை. பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்கவில்லையே என்று நான் ஒருபோதும் வருந்தியதில்லை, ஏமாற்றம் அடைந்ததில்லை.

எனக்கென்று உள்ள வாய்ப்புகள் கண்டிப்பாக என்னிடம் வந்தே தீரும். ஆயிரத்தில் ஒருவன் திரையுலகைக் கலக்கும்.

எனது கேரக்டரை சிறப்பாக வடிவமைத்து அதை அக்கறையுடன் படமாக்கி வருகிறார் செல்வராகவன். கார்த்தி ஒரு சிறந்த நடிகர். அவருடன் நான் ஜோடி சேர்ந்து நடிப்பது சந்தோஷமாக உள்ளது என்றார் ரீமா.

ரீமா சென் இதுவரை எந்தப் படத்திலும் தோன்றியிராத அளவுக்கு இப்படத்தில் படு அழகாக வருகிறாராம். அவருடைய காஸ்ட்யூமிலும் கூட நிறைய மாற்றங்களைப் பார்க்க முடியுமாம். ரீமாவின் இந்தத் தோற்றப் பொலிவுக்கு, பிரபல பேஷன் டிசைனர் எரும் அலிதான் காரணம். ரீமாவை டோட்டலாக மாற்றியுள்ளாராம் இப்படத்தில்.

படத்தில் பார்த்திபனும் இருக்கிறார். முக்கியமான கேரக்டராம் இது. முதலில் தனுஷைத்தான் இந்த கேரக்டரில் நடிக்க வைப்பதாக இருந்தார் செல்வா. ஆனால் அம்முவாகிய நான் படத்தைப் பார்த்த பின்னர், பார்த்திபனைப் போட தீர்மானித்தாராம்.

இயக்குநர் அழகம்பெருமாளும் இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ராம்ஜி கேமராவைக் கையாளுகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் 6 அருமையான பாடல்களும் இடம் பெறுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil