»   »  ஒரு அழகியின் வரவு...

ஒரு அழகியின் வரவு...

Subscribe to Oneindia Tamil

ரேகா உன்னி கிருஷ்ணன்... மீண்டும் ஒரு கேரள வரவு தான், ஆள் படு தூளாக இருக்கிறார். கன்னடத்தில் ஒரு ரவுண்டு முடித்துவிட்டுதமிழுக்கு வந்திருக்கிறார்.

நயனதாராவைத் தொடர்ந்து கேரளத்தில் இருந்து வந்திருக்கும் அடுத்த சிக் பெண்குட்டி இவர்.

அயோத்தியா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தலைப்பே சொல்லிடுமே இது மதத்தைத் தொட்டுப் பார்க்கும் கதை என்பதை.

தென் தமிழகத்தின் மிகப் பெரிய தனியார் பஸ் நிறுவனங்களில் ஒன்றான ஜெயவிலாஸ் குடும்பத்தின் முதல் சினிமா தயாரிப்பு இது.ஹீரோவாக நடிப்பதும் இந்தக் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவரான மோகன் குமார் தான்.

தலைப்பே படு டென்சனூட்டுவதாக உள்ளதே என்று இயக்குனர் ஜெயப்பிரகாசிடம் கேட்டால்,

இது மதங்களை வெல்லும் ஒரு அழகிய காதல் கதை. இதில் எந்த மதத்தையும் புண்படுத்தவோ, தூக்கிப் பேசவோ இல்லை. காதலுக்குகண்ணும், மதமும் கிடையவே கிடையாது என்பதை உரக்கச் சொல்லும் முயற்சி தான் என்கிறார்.

பல்லாண்டுகளாய் நட்பு பாராட்டும் இரு நல்ல குடும்பங்கள் மதத்தால் பிளவுபட்டுவிட, காதலர்களால் மத மோதல் முடிவுக்கு வருவது தான்கதையின் கிளைமேக்ஸ் என்கிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக ராகினி என்பவரும் அறிமுகமாகிறார். மேலும் பழைய வில்லன் சரண்ராஜ், லிவிங்க்ஸ்டன்,மணிவண்ணன், டெல்லி கணேஷ், சீதா, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.


கதைக் களம் நாகர்கோவில் அருகே ஒரு கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்கத்திய பாஷையுடன் குற்றாலம்,தென்காசி, நாகர்கோவில், சென்னை என தமிழகத்திலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

தேவாவின் சகோதரர்களான சபஷ்ே-முரளி தான் மியூசிக்.

மீண்டும் ரேகா உன்னிகிருஷ்ணன் புராணத்துக்குப் போவோம்...

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இந்த வல்லிய பெண்குட்டி கலாஷேத்ரா மாணவியாம். இதனால் உடல் அசைவுகளில் அத்தனை நளினம்காட்டிவிடுகிறார். மலையாளத்தில் தீபங்கள் சாக்ஷி என்ற படத்தில் நடித்த கையோடு தமிழில் நடிக்க முயன்றார்.

ஆனால், சென்னைக்கு வந்து தங்கி வாய்ப்பு தேடியதில் ஹோட்டல் செலவு தான் வேஸ்ட் ஆனது. சான்ஸ் கிடைக்கவில்லை.

இதனால் கன்னடப் படவுலகில் நுழைந்தார். ஆனாலும் மலையாள நடிகைகளின் கடைசி புகழிடம் கோலிவுட் தான். இதனால் அவரதுதமிழ்ப் பட முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன.

பிரபல அவார்ட் பட இயக்குனர் நாகபரணா இயக்கிய சிகுரின கனசு என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகி ராஜ்குமாரின் மகன்உள்பட முன்னணி கன்னட ஹீரோக்களுடன் தலா ஒரு படங்களில் நடித்து முடித்துவிட்டார் ரேகா.

இவரது இடைவிடாத தமிழ் பட தேடலுக்கு அயோத்யா மூலம் வெற்றி கிடைத்திருக்கிறது.

கன்னடத்தில் கவர்ச்சிக்காகத் தான் ஹீரோயின்களை சேர்ப்பார்கள். அங்கு வெற்றிக் கொடி நாட்டிவிட்ட ரேகா, தமிழிலும் தாராளமயம்காட்டத் தயாராகவே இருக்கிறார்.

அயோத்யாவில் கவர்ச்சி தேவையில்லை என்று டைரக்டரே சொன்னபோதும், தமிழில் முதல் படம் என்பதால் முடிந்தவரை முயன்றுகவர்ச்சியழகைக் காட்டியிருக்கிறார் ரேகா உன்னிகிருஷ்ணன்.

படம் முடிந்து தீபாவளிக்கே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. வாங்கத்தான் யாரும் இல்லை என்பது உள்ளிட்ட இன்னபிற காரணங்களால்ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் ரேகா தயாரிப்பாளர், டைரக்டரை விட அதிக டென்சனில் இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil