»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசன் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கள் அவரையும், அவரது ரசிகர்களையும்புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும் என்று அறிக்கை விட்டுள்ளார் நடிகை ரோஜா.

கமலுடன் ஏன் நடிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது, அவருடன் சேர்ந்து நடிக்கவில்லைஎன்பதில் வருத்தமில்லை. அவருடைய படத்தில் நடித்திருந்தால் உதட்டுடன் உதடு முத்தம் கொடுக்க வேண்டும்,ஆபாசமான கேரக்டரில் நடிக்க வேண்டும். எனவே அவருடன் நடிக்காமல் இருப்பதே நல்லது என்று உணர்கிறேன்என்று கூறியிருந்தார் ரோஜா.

இதற்கு கமல் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து ரோஜாவின் கொடும்பாவியை எரித்தனர். மேலும் ஒரு படவிழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் ரோஜாவை கண்டித்து பேசினார்.

இந் நிலையில் நடிகை ரோஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தான் பேசியது கமலையும், அவரதுரசிகர்களையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டும்.

கமலுடன் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கப்பட்டபோது அதற்கான காரணங்களை நான் கூறியிருந்தேன். அதுதவறா?. எனது பேட்டியை திரையுலகைச் சேர்ந்த யாருமே கண்டிக்கவில்லை. மாறாக, தைரியமாககூறியிருக்கிறாயே என்று பாராட்டத்தான் செய்தார்கள்.

இருந்தாலும், கமல்ஹாசன் குறித்து தவறான செய்தி பரவ நான் காரணமாகி விட்டேன் என்பதற்காகவும், எனதுபேட்டி கமலையும், அவரது ரசிகர்களையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

திரையுலகில் தினசரி போராடி போராடி நான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். என்னிடம் இனிமேலும் போராட பலம்இல்லை. திரைப்படங்கள்தான் எனது வாழ்க்கை. ரசிகர்களும், பொதுமக்களும் என் மீது வைத்துள்ளஅனுதாபம்தான் எனது ஒரே சொத்து. அந்த சொத்தை அழித்து விட கமல் ரசிகர்கள் முயல வேண்டாம்.அவர்களுக்கு எனது கோடி நன்றிகள்.

ரவிக்குமார் என்ன பெரிய இவரா?:

கமல்ஹாசன் கலந்து கொண்ட ஒரு பட விழாவில் அவரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக டைரக்டர்கே.எஸ்.ரவிக்குமார் என்னைக் கண்டித்து பேசியுள்ளார். இது சரியல்ல.

இதன் மூலம் கமலுடைய பெயர்தான் கெடும் என்பதை அவர் அறியவில்லையா? கமல் வந்தால்தான் அது பெரியவிழா என்று கூறுகிறீர்களே, அப்போ, ரஜினி, விஜயகாந்த், அஜீத், விஜய் போன்றோர் கலந்து கொள்ளும் விழாக்கள்எல்லாம் சிறிய விழாக்களா?

கமலிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும், அவர் நமக்கு பட வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பதற்காக ஏதாவதுபேசுவதா? ரவிக்குமார் அவர்கள் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு.

தெனாலி பட பூஜையின்போது வந்திருந்த பெண்களையெல்லாம் அழைத்து குத்துவிளக்கேற்ற செய்தார். ஆனால்எனது வாழ்க்கையை பொசுக்கி விட முயலாதீர்கள் என்று ரவிக்குமாரை சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் ரோஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil