»   »  சதா சந்தோஷம்

சதா சந்தோஷம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உன்னாலே உன்னாலே படத்தின் ஓபனிங் சிறப்பாக இருப்பதால், அதன் நாயகி சதா சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ளார்.

ஜெயம் மூலம் தமிழிலும், தெலுங்கிலும் அறிமுகமானவர் சதா. ஜெயம் வெற்றியை தொடர்ந்து நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார்.

எடுப்பான முகம், துடிப்பான இடை, வசீகர புன்னகை என வாகாக இருந்தும், ஆரம்ப காலத்தில் செய்த பந்தாக்களால் அடுத்தடுத்து படம் இல்லாமல் தவித்தார் சதா.

கிளாமர் காட்ட முடியாது என்று அவர் அநியாயமாக அடம் பிடித்ததும் மார்க்கெட் திவால் ஆனதற்கு முக்கிய காரணம். அந்நியனில் கொஞ்சம் போல கிளாமர் காட்டிப் பார்த்தார். ஆனாலும் சதாவின் மார்க்கெட் சரிவு அதிகமானதே தவிர மேலே வரவே இல்லை.

இடையில் சுத்தமாக தமிழ்ப் பட வாய்ப்புகளே இல்லாமல் ேபாய் விட்டது. பின்னர் வந்த பிரிய சகியும் கூட பெரிதாக கை கொடுக்கவில்லை. விரக்தியில் இருந்த சதாவுக்கு ஜீவாவின் இயக்கத்தில் வந்த உன்னாலே உன்னாலே ெபரும் தெம்பு கொடுத்துள்ளது.

புதுமுக நாயகன் வினய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் சதா. கூடவே கஜோலின் தங்கச்சி தனிஷா இன்னொரு நாயகியாக கிளாமர் புயலாக சுழன்றுள்ளார்.

படம் வந்து, ஓபனிங் சிறப்பாக இருப்பதால் சந்ேதாஷமாகியிருக்கிறார் சதா. மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு அடித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டதாம்.

இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ராம கோபால் வர்மா தயாரித்து வரும் லீலை படத்தில் சதா நடித்து வருகிறார். இதில் முதலில் வில்லத்தனமான ரோலில் நடிக்க கேட்டராம் ராம கோபால்.

ஆனால் வில்லியாக நடிக்க சதா மறுத்து விட்டார். இதையடுத்து அவரை நாயகியாக்கி விட்டார் வர்மா. வில்லியாக சதா நடிக்க மறுத்த கேரக்டரில் பிக் சிஸ்டர் ஷில்பா ஷெட்டியின் தங்கச்சி ஷமீதா ஷெட்டி கலகலப்பாக நடித்து வருகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil