»   »  சதாவின் சதைப் படம்

சதாவின் சதைப் படம்

Subscribe to Oneindia Tamil


அலட்டல் நாயகி என்ற பெயரைப் பெற்றுள்ள சதா, தமிழில் கவர்ச்சி என்றாலே காச் மூச் என்று கத்தி வருவது தெரிந்தது தான். இதே சதா, கவர்ச்சியில் கதகளி ஆடியிருக்கும் ஒரு படம் கன்னடத்தில் வெளியாகி படு ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஜெயம் படத்தில் பாவாடை தாவணியில் அறிமுகமாகி தனது அழகால் ரசிக இதயங்களை காவு கொண்டு போனவர் சதா. துளிக் கூட கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்தார். அட, இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நடிகையா என கோடம்பாக்கம் வியந்தது.

அந்நியன் படத்திலும் சதா ஒத்துழைக்க மறுக்கவே கடுப்பாகிப் போன ஷங்கர், வேற ஆளைப் போடலாமா என்று யோசித்தார். இதனால் இறங்கி வந்தார் வந்தார் சதா.

ஆனால், இதே சதா கன்னடப் படமொன்றில் பயங்கர கவர்ச்சி காட்டி கலங்கடித்துள்ளார். தெலுங்கு, கன்னடத்தில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த காலத்தில் இவர் நடித்தப் படம் மோனலிசா. அதில் சதாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு எக்ஸ்போஸ் செய்திருக்கிறாராம்.


கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் வந்த வேகத்திலேயே சுருண்டுவிட்டது. ஆனால், இப்போது சதாவுக்கென்று ஒரு பெயர் கிடைத்துள்ளதையடுத்து இப்போது அந்தப் படத்தை தூசிதட்டி மீண்டும் செகண்ட் ரவுண்டில் வெளியிட்டுவிட்டார்கள்.

படத்தின் விளம்பர பேனர்களில் ஹீரோவையே காணோமாம். முழுக்க சதாவின் படு தூக்கலாக போஸ்களால் அலங்கரித்துள்ளார்களாம்.

இதையடுத்து மோனலிஸா படத்தை தமிழில் டப் செய்ய சில தயாரிப்பாளர்கள் பெங்களூரில் முகாமிட்டு பேரம் பேசி வருகிறார்களாம்.

இப்படித்தான் சேது படம் வெளியானவுடன் அபிதா நடித்த பலான மலையாளப் படங்தளை டப் செய்து வெளியிட்டு அவரது மார்க்கெட்டை அவுட் ஆக்கினார்கள். இப்போது சதாவுக்கும் அதே ட்ரீம்மெண்ட் தரக் கிளம்பியுள்ளார்கள்.

சதாவை புதிய தெலுங்குப் படமொன்றில் புக் செய்துள்ள இயக்குநர் தேஜா, மோனலிஸாவைப் பார்த்துவிட்டு இதே மாதிரி நடிக்கனும் என்று சதாவை வற்புறுத்தி வருகிறாராம். இதனால் வாங்கிய அட்வான்ஸைத் தந்துவிட்டு ஓடி வந்துவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் சதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil