»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஜெயம் படத்தில் அறிமுகமான சதாவுக்கு வாய்ப்புக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

புனேவைச் சேர்ந்த சதா முதலில் தெலுங்கில் அறிமுகமானார். அங்கு பல படங்களில் நடித்த இவரை எடிட்டர் மோகன் தமிழுக்கு அழைத்து வந்தார். தனது மகனை வைத்து அவர் தயாரித்த ஜெயம் படம் சூப்பர் ஹிட்டானது.

முன்னதாக தமிழில் சான்ஸ் தேடி தனது ஆல்பங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பியபோது குண்டக்க மண்டக்க போஸ்களில் தான் இருந்தார் சதா. ஆனால், இவரது முகத்தில் இருந்த குடும்பப் பாங்கான தோற்றத்தை வைத்து ஜெயம் படத்தில் பாவாடை -தாவணியில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கொடுத்தார்கள்.

படம் பெரும் வெற்றி பெற்றது. நடிப்பும் நன்றாக இருந்தால் சதாவின் காட்டில் அடை மழை ஆரம்பித்துவிட்டது. இதனால் கவர்ச்சியை எல்லாம் கட்டி ஓரத்தில வைத்துவிட்டு நல்ல கேரக்டர் ரோல்களை மட்டுமே தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

ஸ்னேகாவுக்கு போக இருந்த சில ஹோம்லியான கேரக்டர்கள், ஸ்னேகாவின் ராசி (படங்கள் ஓடாததால்) காரணமாக சதாவை நோக்கி படையெடுத்துவிட்டன.

கைவசம் நிறைய படங்களை வைத்துள்ள இவரது கால்ஷீட் கிடைப்பதே சிரமம் எனற நிலை உருவாகியுள்ளதால் தனது சம்பளத்தை ரூ. 20 லட்சமாக உயர்த்தியிருக்கிறார். பேரம் பேசினாலும் ரூ. 15 லட்சத்துக்குக் குறைய மாட்டேன் என்கிறாராம்.

சம்பளத்தை இவர் கூட்டினாலும் இவரை புக் செய்யவும் போட்டி இருக்கத் தான் செய்கிறது. காசுக்கு அடுத்தபடியாக சதா போடும் முக்கியமான கண்டிசன், இளம் நாயகர்களுக்கு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்பது தான்.

இப்போது ஸ்ரீகாந்துடன் வர்ணஜாலம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவரை மாதவனுக்கு ஜோடியாக புக் செய்திருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார். இவர் இயக்கும் எதிரி என்ற படத்தில் ஹீரோயினாக சதா தான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ரஜினியின் படம் ஏதும் தனக்கு இப்போதைக்குக் கிடைக்காது என்பதால் ரவிக்குமார் ஆரம்பித்துள்ள படம் இது. படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை)பிரசாத் ஸ்டுடியோவில் ஆரம்பித்தது. சூட்டிங்கை ஜெட் வேகத்தில் நடத்தி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

இதற்கிடையே சதாவைத் தேடி இந்திப் பட வாய்ப்பும் வந்துவிட்டது. விஜய் நடித்து வரும் கில்லி இந்தியில் ரணதீர் என்ற பெயரில் தயாராக உள்ளது. இதில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக சதா நடிக்கப் போகிறார் சதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil