»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஓவர் பந்தா காட்டிய சதாவை ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து வழிக்கு கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர்

முதல் படம் முடித்தபோதே, சதா பண்ணுகிற ரவுசு தாங்க முடியலைடா சாமி என்று கோடம்பாக்கத்தில் பேச்சுகிளம்பியது. தமிழுக்கு அறிமுகமாகும் மலையாள நடிகைகளைப் போல, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்; கேரக்டர்பிடித்திருந்தால் நடிப்பேன் என்று பயங்கரமாக பந்தா செய்தார் சதா.

ஆனாலும், திறமையான நடிகை என்பதால் படங்கள் அடுத்தடுத்து ஒப்பந்தமாகின.

தொப்புள் தெரிய டிரஸ் போடமாட்டேன் என்று அடம் பிடித்தவரை, அப்படி, இப்படி என்று தாஜா செய்து எதிரி படத்தில் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமார் கொஞ்சம் கிளாமராக நடிக்க வைத்தார்.

படம் ரிலீஸாகி, நல்ல கூட்டமிருப்பதாக நாலாபக்கமிருந்தும் பாஸிடிவ் ரிசல்ட் வரத் தொடங்கியுள்ளது. இதைக்கேட்டதும், இதுவரை வாய் கொப்பளிக்க மினரல் வாட்டர் கேட்ட சதா இப்போது ஆப்பிள் ஜூஸ் கேட்கிறாராம்.

தங்கியிருப்பது எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்பதால், ரூம் வாடகை, மும்பைக்கு டெலிபோன் பில் எனஇவர் பண்ணும் செலவுகளை எல்லாம், கடனே என்று தயாரிப்பாளர்கள் கட்டி வருகிறார்கள்.

ஆனாலும் இவர்பண்ணும் பந்தாவைத் தான் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள்.

எதிரி படத்தில் கதாநாயகி சதாதான் என்றாலும், பல இடங்களில் கனிகா தனது அநாயசமான நடிப்பால் இவரைஓரங்கட்டியிருப்பார்.

இது புரியாத சதா, படம் ஓடுவதற்கு நானும் முக்கிய காரணம் என்று போவோர்வருவோரிடம் எல்லாம் கூறிவருகிறார்.

இப்போது, ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பாய்ஸ்தோல்விக்குப் பின் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஷங்கர்இருக்கிறார். தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும் செலவு பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றுகூறிவிட்டார்.

பெரும்பாலும் ஒரு பாடலை 3 நாள்களில் படம் பிடித்துவிடுவார்கள். ஆனால், அந்நியன் படத்துக்கு, ஒரே ஒருபாடலை எடுக்க 15 நாட்கள் டூராக ஆம்ஸ்டர்டாம் சென்றுள்ளார்கள். யூனிட்டே கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும்போது, இந்த டிரஸ் போட மாட்டேன்; அந்த மூவ்மெண்ட்ஸ் பண்ணமாட்டேன் என்ற தனது பந்தாபரிவர்த்தனையை சதா தொடர கடுப்பாகி விட்டார் ஷங்கர்.

சதாவை படத்தை விட்டே தூக்கப் போகிறேன் என்று ஷங்கர் தனது உதவியாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.இதைக் கேட்டதும் அதிர்ந்து போன சதா, இப்போது தனது பந்தாவையெல்லாம் ஓரங்கட்டி விட்டு சமர்த்தாக நடந்துகொள்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil