»   »  கொட்டிக் கொடுத்தாலும் கால்ஷீட் தர மறுக்கும் நடிகை

கொட்டிக் கொடுத்தாலும் கால்ஷீட் தர மறுக்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர்கள் தான் கேட்கும் சம்பளத்தை கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் சாய் பல்லவி நடிக்க தயாராக இல்லை.

பிரேமம் மலையாளம் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் சாய் பல்லவி. அந்த ஒரேயொரு படம் மூலம் அவர் கேரளா மட்டும் அல்ல தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவிலும் ஏகத்துக்கும் பிரபலமாகிவிட்டார்.

தமிழ், தெலுங்கு ரசிகர்கள் எல்லாம் மலர் டீச்சர், மலர் டீச்சர் என்று அவரை கொண்டாடினார்கள்.

தமிழ்

தமிழ்

தமிழ் பெண்ணான சாய் பல்லவியை கோலிவுட்டுக்கு அழைத்து வர பலரும் முயற்சி செய்தார்கள். மணிரத்னம் கூட தனது படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் சாய் பல்லவி மறுத்துவிட்டார்.

மாதவன்

மாதவன்

இறுதியாக சாய் பல்லவி மாதவன் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். தமிழுக்கு புதுசு என்றாலும் 40 முதல் 50 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் அம்மணி.

விக்ரம்

விக்ரம்

சாய் பல்லவி ரூ.50 லட்சம் வரை கேட்டாலும் தர தயாரிப்பாளர்கள் ரெடியாக உள்ளனர். ஆனால் அவர் தான் ரொம்பவே யோசித்து படங்களை தேர்வு செய்கிறார். விக்ரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ரூ.15 லட்சம் முன்பணம் பெற்ற பிறகு படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

நடிகைகள்

நடிகைகள்

புதுமுக நடிகை தானே இந்த சாய் பல்லவி, எதற்காக அவரை இப்படி தாங்குகிறார்கள் என்று பிற புதுமுக நடிகைகள் அலுத்துக் கொள்கிறார்கள். டாக்டரான அவர் முன்கூட்டியே ஷூட்டிங் டேட்ஸ் கேட்டு தனக்கு சரிப்பட்டு வந்தால் தான் நடிக்க ஒப்புக் கொள்கிறார். ஒரு படம் நடித்தாலும் நச்சுன்னு நடிக்க வேண்டும் என நினைக்கிறார்.

படுகர் இன பெண்

படுகர் இன பெண்

பழங்குடி மக்களான படுகர் இனத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் முதல் பெண் சாய் பல்லவி. மிகவும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்த சமூகத்திலிருந்து வந்ததால், சினிமாவுக்கே உரிய எந்த அட்ஜஸ்ட்மென்ட்டுக்கும் அவர் தயாராக இல்லை. அதனால்தான் பல பெரிய படங்களை அவர் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள்.

English summary
Sai Pallavi is very very choosy when it comes to selecting movies. Though producers are ready to pay more, she is rejecting lot of movie offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil