Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்ன சொல்றீங்க.. சாய் பல்லவிக்கு திருமணமா ?.. இணையத்தில் பரவிய செய்தி!
சென்னை : மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை சாய் பல்லவிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து உள்ளது.
முதல் படத்தின் ஹிட் காரணமாக சாய் பல்லவிக்கு தெலுங்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன.
தற்போது சாய்பல்லவி தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
மேடையில் கதறி அழுத சாய் பல்லவி... கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன நானி!

தெலுங்கில் பிஸி
அதன் காரணமாக தற்போது அம்மணி தான் தெலுங்கில் டாப் நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் அடித்த சூப்பர் ஹிட் காரணமாக சாய் பல்லவியின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்த சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்காராய் படம் வெளியாக மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

தங்கையாக
இந்நிலையில், தற்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் சாய் பல்லவி அவரின் தங்கையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். சாய் பல்லவிக்கு மகேஷ்பாபுவின் தங்கையாக நடிக்க விருப்பம் இல்லை என்றும், இருப்பினும் திரிவிக்ரம் படத்தை தவறவிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மறுத்துவிட்டார்
அதேபோல, அஜித் நடித்த தமிழ் படமான வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வாய்ப்பையும் வேண்டாம் என்று தட்டிகழித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் இதுவரை எந்த புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

சாய்பல்லவிக்கு திருமணமா?
இதுகுறித்து சாய் பல்லவியிடம் கேட்டபோது, தெலுங்குவில் தனக்கென தனி இமேஜ் இருந்து வருகிறது. சாய்பல்லவி திருப்திகரமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி. ஆனால், டோலிவுட் வட்டாரமே சாய்பல்லவிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் இதனால்தான் படங்களில் கமிட்டாகாமல் இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. இந்த தகவலை கேள்வி பட்ட இளசுகளின் மனசு நிச்சயம் பஞ்சராகி இருக்கும்.