»   »  மணிரத்னத்தைத் தொடர்ந்து 'அஜீத்' படத்தையும் நிராகரித்த சாய் பல்லவி!

மணிரத்னத்தைத் தொடர்ந்து 'அஜீத்' படத்தையும் நிராகரித்த சாய் பல்லவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கால்ஷீட் பிரச்சினை காரணமாக அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பை 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி இழந்திருக்கிறார்.

'பிரேமம்' படத்தின் மூலம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் எக்கச்சக்க ரசிகர்களைக் குவித்தவர் சாய் பல்லவி. 'பிரேமம்' படத்துக்குப் பின் தமிழில் அவரை நடிக்க வைக்க கோலிவுட் இயக்குநர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர்.

Sai Pallavi Rejects AK 57 Offer

ஆனால் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால் சாய் பல்லவியின் தமிழ் அறிமுகம் அவ்வளவு எளிதில் நிகழாது போல. மணிரத்னம் படத்தில் கார்த்தி ஜோடியாக சாய் பல்லவி தான் முதலில் ஒப்பந்தமானார்.

ஆனால் அப்படத்தின் கதையால் இடையிலேயே அதிலிருந்து விலகிக்கொள்ள, நீண்ட தேடுதலுக்குப் பின் தற்போது அதிதி ராவ், கார்த்தியின் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜீத் ஜோடியாக 'ஏகே 57' படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் சாய் பல்லவி தவிர்த்திருக்கிறார். தெலுங்கில் 'அமெரிக்க அப்பை தெலுங்கானா அம்மை' படத்திற்காக ஒதுக்கிய தேதிகளை 'ஏகே57' படத்திற்காக கேட்டதாகவும், அதனால் தான் அஜீத் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை சாய் பல்லவி நிராகரித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் மலையாளம், தெலுங்கில் கலக்கி வரும் சாய் பல்லவி தமிழுக்கு எப்போது வருவார்? என ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

English summary
Premam Fame Actress Sai Pallavi Rejected AK 57 Offer Regarding Call sheet Issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil