Don't Miss!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- News
காதலுக்கு எல்லை கிடையாது.. கடல் கடந்த காதல்.. ஹாங்காங் பெண்ணை மணந்த புதுக்கோட்டை இளைஞர்
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
லவ் லெட்டர் எழுதி செம அடி வாங்கினேன்...யாருக்கு எழுதினார்...சாய்பல்லவி சொன்ன டாப் சீக்ரெட்
சென்னை : தமிழில் சில படங்களில் முகம் தெரியாத ரோல்களில் நடித்து நடிகையான சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் தமிழில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் செம ஹிட் ஆனது.
படம் ஹிட் ஆனதை விட, படத்தில் மலர் டீச்சர் ரோலில் நடித்த சாய் பல்லவி ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதையும் கவர்ந்து விட்டார். மலர் டீச்சர் - ஜார்ஜ் கேரக்டர்களின் க்யுட்டான ரொமான்டிக் காட்சிகள் தான் இந்த படத்தின் மாஸ் ஹிட்டிற்கு காரணம்.
பிரேமம் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தேடப்படும் நடிகையாகி விட்டார் சாய் பல்லவி. தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகி வருகின்றன.
உனக்கு
என்ன
தெரியும்
என்று
கேட்ட
வாலி...
முதல்
சந்திப்பிலேயே
வியக்க
வைக்கும்
செயலை
செய்த
இளையராஜா

ராணாவுடன் காதல் கிசுகிசு
தெலுங்கில் ராணாவுடன் இவர் இணைந்து நடித்த விரத பர்வம் படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளது. இதில் நக்சலைட் ரோலில் சாய் பல்லவி நடித்திருப்பார். படம் ரிலீசாவதற்கு முன்பே காதல் கிசுகிசுக்கள், சர்ச்சைகள் என பலவற்றில் சிக்கி, பரபரப்பாக பேசப்பட்டார் சாய் பல்லவி.

சாய் பல்லவியின் பேட்டி
இந்நிலையில் விரத பர்வம் படத்திற்காக யூட்யூப் சேனல் ஒன்றிற்கு சாய் பல்லவியும், ராணாவும் பேட்டி அளித்தனர். விரத பர்வம் படத்தில் வெண்ணிலா என்ற ரோலில் நடித்திருக்கும் சாய் பல்லவி, மிகவும் ரிஸ்க் எடுத்து ராணாவிற்கு லவ் லெட்டர் கொடுப்பார். இந்த சீன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீன் பற்றி சாய் பல்லவியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

லவ் லெட்டர் எழுதி அடி வாங்கினேன்
அதில், விரத பர்வம் படத்தில் வருவதை போல் நிஜ வாழ்க்கையில் யாருக்காவது லவ் லெட்டர் கொடுத்தது உண்டா என சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், படத்தில் டைரக்டர் சொன்னதற்காக லவ் லெட்டர் எழுதினேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை எழுதி உள்ளேன். சிறு வயதில், நான் 7 ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பையனுக்கு லவ் லெட்டர் எழுதி, எங்க அம்மா - அப்பாவிடம் மாட்டி, செம அடி வாங்கினேன் என்றார்.

ராணா யாருக்கு லெட்டர் எழுதினார்
இதே கேள்வி ராணாவிடமும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நானும் ஒரே ஒரு முறை லெட்டர் எழுதி உள்ளேன். லவ் லெட்டர் கிடையாது. சிறு வயதாக இருக்கும் போது எனது தாத்தாவிற்கு எழுதி உள்ளேன். அதற்கு பிறகு யாருக்கும் நான் லெட்டர் எழுதியது கிடையாது என்றார்.

கார்கிக்காக காத்திருக்கும் சாய் பல்லவி
சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சுர்யாவின் 2 டி என்டர்டைன்மென்ட் தான் தயாரித்துள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.