Don't Miss!
- News
கண்ணுக்கு எட்டிய தூரம் எதிர்தரப்பை காணவில்லை..ரொம்ப அடக்கமாக இருக்கிறார்கள்..சொல்வது கே.எஸ்.அழகிரி
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மாடர்ன் அவுட்பிட்டில் கொள்ளை அழகாய் சமந்தா... கோவா சர்வதேச விழாவில் அபாரம்
கோவா : நடிகை சமந்தா சிறப்பான படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் நாக சைத்தன்யாவுடனான தனது திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார்.
16 வயதினிலே ஸ்ரீதேவி போல சைடு ரோஸ் உடன் போஸ் கொடுக்கும் நடிகை கௌரி கிஷன்!
இந்நிலையில் கோவாவில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

நடிகை சமந்தா
தான் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்டார் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின்பும் தமிழ், தெலுங்கு என பிசியான நடிகையாக வலம்வந்தார் நடிகை சமந்தா. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இவரது படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

பிசியான நடிகை
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இவரது படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும் தி பேமிலி மேன் 2 வெப் சீரிசிலும் நடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவரானார். இந்த சீரிஸ் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் சமந்தாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

விவாகரத்து முடிவு
இந்நிலையில் தனது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யும் முடிவை மேற்கொண்டார் சமந்தா. இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் இந்த அறிவிப்பை மேற்கொண்டனர். ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் இந்த விவாகரத்து முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்த படங்கள்
இந்நிலையில் தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் சமந்தா. இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்த மாதத்தில் வெளியாக உள்ளது. சகுந்தலம் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் பிரபல நடிகையின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்திப் படத்திலும் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டாப்சி தயாரிப்பில் சமந்தா
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை காந்தரூபய் ஞானசேகரன் என்பவர் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவாவில் 20ம் தேதி முதல் 28ம் தேதிவைர ஒரு வார காலம் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசவுள்ளார் சமந்தா,
Recommended Video

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பு
தென்னிந்திய மொழிகளில் நடித்துவரும் நடிகைகளில் இந்த வாய்ப்பை பெற்றுள்ள முதல் நடிகை என்ற பெருமை சமந்தாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவில் பங்கேற்றுள்ள சமந்தா, ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் மாடர்ன் உடையில் வலம் வந்துள்ளார்.