»   »  குவைத்திலிருந்து சானா...!

குவைத்திலிருந்து சானா...!

Subscribe to Oneindia Tamil
Sana Khan
சிம்பு சிலம்பவுள்ள சிலம்பாட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐக்கிய அரபு தேசத்திலிருந்து அழகுக் குதிரை சானா கான் கோலிவுட்டுக்கு வருகிறார்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் சிலம்பாட்டம். இதில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். கேமராமேன் சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். வருகிற 7ம் தேதி இப்படம் தொடங்குகிறது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இது 25வது படம்.

இப்படத்தில் முதலில் சினேகா நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் இவர் அந்த சினேகா இல்லை, சினேகா உல்லல் என்று இன்னொரு பேச்சு கிளம்பியது. பிறகு இருவருமே நடிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

தற்போது இருவருமே படத்தில் இல்லையாம். மாறாக, குவைத்தைச் ேசர்ந்த அழகு மாடல் சானா கான் நாயகியாக நடிக்கவுள்ளார்.

பார்க்க, நம்ம ஊர் பொண்ணு போல படு க்யூட்டாக இருக்கிறார் சானா கான். வசிப்பது குவைத்தாக இருந்தாலும், பிறந்தது மும்பையாம். பேஷன் டிசைனிங்கிலும், மாடலிங்கிலும் படு பிசியாக இருக்கும் சானா கானை கோலிவுட்டுக்குக் கூட்டி வருகிறார்கள் சிம்பு படம் மூலமாக.

வெள்ளிக்கிழமை சிலம்பாட்டம் படப்பிடிப்பு தொடங்கியது. பாவாடை, தாவணியில் அச்சு அசல் தமிழ்ப் பெண் போல அம்சமாக தோன்றி நடித்தார் சானா.

முதல் சீனை முடித்து விட்டு வந்த சானா நம்மிடம் பேசுகையில், எனது பெயரே சானா கான்தான். இந்தப் பெயரை படத்துக்காக மாற்ற விருப்பமில்லை. சானா கான் என்ற பெயர் ஏற்கனவே ரொம்ப பாப்புலரான பெயர்தான் என்பதால் மாற்ற விரும்பவில்லை.

குவைத்திலும், மும்பையிலும் 30 விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். ஒரு மாடலாக, நான் சென்னைக்கு புதியவள் இல்லை. ஆனால் ஒரு சினிமா நடிகையாக இப்போதுதான் சென்னைக்கு வந்துள்ளேன். தமிழ்ப் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.

சவாலுக்குரிய, கிளாமரான வேடங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். கிளாமருக்கும், செக்ஸியாக தோன்றுவதற்கும் என்ன அளவுகோல் என்று எனக்குத் தெரியவில்லை. கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக கிளாமர் காட்டி நடிக்க யோசிக்க மாட்ேடன் (அபிராமி, அபிராமி!)

இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் முன்பு சிம்புவை சந்தித்தேன். ரொம்ப எனர்ஜடிக்கான கிரியேட்டர் அவர். சுவாரஸ்யமான மனிதர். சென்னைக்கு வருவதற்கு முன்பு அவருடைய மன்மதன், வல்லவன் ஆகிய படங்களைப் பார்த்தேன்.

சிம்புவின் கிராமத்துக் காதலியாக நான் இப்படத்தில் நடிக்கிறேன். ரொம்ப க்யூட்டான, அனைவரும் விரும்பக் கூடிய வகையில் எனது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனது வாழ்நாளிலேயே நான் இப்போதுதான் பாவாடை, தாவணி காஸ்ட்யூமையே அணிகிறேன். இந்த காஸ்ட்யூம் எனக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது, எனது லுக்கையே மாற்றி விட்டது என்று அழகுப் புன்னகையுடன் கூறுகிறார் சானா.

இப்படத்தில் அப்பாவி இளைஞன் வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ளாராம். மன்மதன் படத்தில் வந்த அப்பாவி இளைஞன் போன்ற வேடமாம் இது. கோவில் பூசாரியாக வருகிறாராம் சிம்பு. சமய சந்தர்ப்பம் காரணமாக சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடுகிறதாம்.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள கோவில் நகரங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளது. படத்தில் லொள்ளு சபா சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். தினா இசையமைக்கிறார்.

இந்த ஆண்டு சிம்புவின் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடைசியாக வந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான வல்லவன். தற்போது காளை மற்றும் கெட்டவன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சிம்பு. இதில் கெட்டவன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காளை அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திரைக்கு வரக் கூடும்.

குவைத்திலிருந்து கூட்டி வந்துள்ள சானாவை கிளாமரில் மட்டுமல்லாது, நடிப்பிலும் நன்கு சானை தீட்டி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துங்க சரவணன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil