»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மாற்றி மாற்றி சான்ஸ் தேடித் தேடி அலுத்துப் போய்விட்ட சங்கவிஎல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டார்.

கவர்ச்சிப் புயலாய் தமிழில் நுழைந்த அவரை எல்லா நடிகர்களும் கண்டுகொள்ளாமல் விட்டதால், சொந்த ஊரானமைசூருக்கே போனார். தாய்மொழியான கன்னடத்தில் முயற்சி செய்தார். சில மூன்றாம் தர சினிமாக்களில் சான்ஸ்கிடைத்தது.

பின்னர் கன்னடமும் கைவிட தெலுங்குக்குப் போனார். அங்கு ஓரளவுக்கு மறுவாழ்வு கிடைத்தது. சிவய்யா என்றபடத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் சுரேஷ் வர்மாவுக்கும் சங்கவிக்கும் இடையே லவ் ஏற்பட்டது.

இதையடுத்து அவரது நான்கு படங்களிலும் சான்ஸ் கிடைத்தது. அதில் நடித்தபோது காதலும் இறுகியது.

இந் நிலையில் ஒல்லியானால் தமிழில் சான்ஸ் கிடைக்கும் என்று யாரோ சொல்ல, உடம்பைக் குறைத்துக் கொண்டுதயாரிப்பாளர்களை ஒரு ரவுண்ட் வந்து பார்த்தார். ஆனால், ரஜினியின் பாபாவில் ஒரு துக்கடா கேரக்டரும்,கமலின் பஞ்ச தந்திரத்தில் 4ல் ஒரு ஹீரோயின் சான்சும் மட்டுமே கிடைத்தது.

இதன் பின்னர் வாய்ப்புகள் வராமல் போகவே மீண்டும் மைசூர் திரும்பினார். இந் நிலையில் தான் பாண்டியராஜன்தனது கலாட்டா கணபதி படத்தில் சங்கவியைப் போட ரெக்கமெண்ட் செய்தார். வழக்கமாக பாண்டியராஜனுடன்நடிக்கும் ரசிகா நடிக்க மறுத்ததும், ரவளி அளவுக்கு மீறி பெருத்துப் போனதும் தான் சங்கவிக்கு அந்த சான்ஸ்கிடைக்கச் செய்தது.

கலாட்டா கணபதி படத்தில் கவர்ச்சியாட்டம் போட்டுள்ளார் சங்கவி. ஆனால், இந்தப் படத்தை வாங்க ஆள்இல்லை. இதனால் பாண்டியராஜனே விழி பிதுங்கிப் போயுள்ளார். அதில் நடித்த சங்கவியும் அப்செட்.

இதனால் இனியும் சினிமாவில் சான்ஸ் தேடி அலைவதை விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்துவிட்டார்.

வரும் 15ம் தேதி சங்கவிக்கும் சுரேஷ் வர்மாவுக்கும் கல்யாணமாம். ஹைதராபாத்தில் தான் திருமணம் நடக்கும்என்கிறார்கள்.

கல்யாணத்துக்குப் பிறகும் சான்ஸ் கிடைத்தால் நான் நடிக்க ரெடி என்கிறார். ஆடுன காலும்.. பாடுன வாயும்..சும்மா இருக்குமா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil