மகளால் கிடைத்த பெருமை.. துள்ளிக்குதித்த சரண்யா பொன்வண்ணன்.. இதை விட அம்மாவிற்கு வேற என்ன வேணும்!

சென்னை: தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றால் அனைவரது மனதிற்கும் முதலில் நினைவுக்கு வருபவர் சரண்யா பொன்வண்ணன் தான். தனுஷ், சூர்யா, விஷால், சசிக்குமார், விஷ்ணுவிஷால் என பல முக்கிய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் சூப்பர் அம்மா என்பதை நிரூபித்துள்ள சரண்யா, இரண்டு மகள்களையும் டாக்டராக்கி உள்ளார்.

நடிகை சரண்யா பொன் வண்ணன், கமலஹாசனுக்கு ஜோடியாக நாயகன் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அவர் அறிமுகமான முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அந்த படத்தில் ரெட்டை ஜடையில், பாவாடை தாவணியில் அழகு பதுமையாக வந்த இவரை, தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த படத்தைத் தொடர்ந்து, மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்ததார்.

Saranya ponvannan daughter
Photo Credit:

சரண்யா பொன்வண்ணன்: சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே, 1995ம் ஆண்டு நடிகர் பொன் வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை பிறந்ததால் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக சினிமாவை விட்டு விலகினார். குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும், ஜீவா நடித்த ராம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், கிரீடம், புலி வருது, களவாணி, பாண்டி, ஒரு கல் ஒரு கண்ணடி, தென் மேற்கு பருவக்காற்று, என அடுத்தடுத்து படங்களில் முன்னணி நடிகர்களுக்கும் சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்து வருகிறார்.

இரண்டு மகள்களுமே டாக்டர் : பொன்வண்ணன் - சரண்யா இருவருமே நடிர்களாக இருந்த போதும், பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்களையும் சினிமா பக்கமே தலைகாட்டாமல் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கி உள்ளார். பிரியதர்ஷினி மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளளைய மகள் சாந்தினி மகப்பேறு மருத்துவராகவும் உள்ளனர். தற்போது, சரண்யா பொண்வண்ணன் தனது மகள் பிரியதர்ஷினி MD Pediatrics பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கண்டிப்பான அம்மா: அண்மையில் சரண்யாவின் மகள்கள் பிரியதர்ஷினி, சாந்தினி இருவருமே youtube சேனலுக்கு பேட்டி அளித்தனர். அதில், டாக்டராக வேண்டும் என்பது எங்களுடைய ஆசையாக இருந்தது. அந்த ஆசைக்கு அப்பா அம்மா இருவருமே ஓகே சொல்லி விட்டார்கள். இதைத்தான் படிக்க வேண்டும் என்று இருவருமே சொன்னது இல்லை. நாங்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றினார்கள். எப்பொழுதுமே அம்மா படித்து தான் ஆக வேண்டும் என எங்களை கட்டாயப்படுத்தியது இல்லை. அன்னைக்கு படத்தை படித்துவிடுங்கள் என்று தான்சொல்வார்கள். அதே போல சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் அவர்களின் கையால் ஏதாவது சமைப்பார்கள் அது அவர்களின் பழக்கம். ஆனால், வீட்டில் அம்மா ரொம்ப ஸ்ரிக்ட், சொன்ன வேலையை செய்யவில்லை என்றால் திட்டுவாங்க, ஆனால், அப்பா எங்களிடம் ரொம்ப ஜாலியாக பேசுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X