»   »  விவாகரத்து கோரும் சரிதா!

விவாகரத்து கோரும் சரிதா!

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சரிதா விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ெமளன கீதங்கள், அக்னி சாட்சி, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, சிவப்பு சூரியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளவர் சரிதா.

மிகச் சிறந்த நடிகையான சரிதா, கேரளாவைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் முன்னணியில் இருந்து வந்த சரிதா, 20 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகர் முகேஷைக் கல்யாணம் செய்து கொண்டார். சரிதா, முகேஷ் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஹீரோயின் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று, கல்யாணம் ஆன பின்னர் நடிப்பிலிருந்தும் விலகினார் சரிதா. கணவருடன் கேரளாவில் குடும்பம் நடத்தி வந்தார். பின்னர் முகேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.

சென்னைக்கு வந்து செட்டிலான சரிதா, படத் தயாரிப்பில் இறங்கினார். பிரண்ட்ஸ் படத்தை இவர்தான் அப்பச்சனுடன் சேர்ந்து கூட்டாக தயாரித்தார். பின்னர் நடிக்கவும் ஆரம்பித்தார்.

பாலுமகேந்திராவின் ஜூலி கணபதியில் இவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.இடையே ராதிகாவின் செல்வி டிவி தொடரிலும் நடித்தார் சரிதா.

இந்த நிலையில், முகேஷிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சரிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சரிதா மட்டும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். முகேஷ் வரவில்லை. இதையடுத்து வழக்கை 26ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் முகேஷும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இதற்கிடையே சரிதாவின் கணவர் முகேஷ் கொச்சி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் ெசய்துள்ளார். அதில் தனது 2 மகன்களும் சரிதாவிடம் இருக்கிறார்கள். அவர்களை மாதம் ஒரு முறை பார்ககவும், பேசவும் அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil