»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை விஜி தற்கொலைக்கு காரணமான காதலன் ரமேஷை தேடி பெரும் போலீஸ் பட்டாளமே அலைந்து வருகிறது.

சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தொடங்கி கோடம்பாக்கம் ரூம் பாய்கள் தங்கும் அறைகள் வரை எதையும் விடாமல் சல்லடைபோட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றனர் போலீஸார்.

விஜி தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவருடைய முன்னாள் உதவியாளர் கிருஷ்ணகுமாருக்கு பேஜர் மூலம் தகவல் கொடுத்ததைப் போலரமேஷூக்கும் விஜி தகவல் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதைப் பார்த்தவுடன் ரமேஷ் தப்பியிருக்கலாம் என்று போலீஸார்நினைக்கின்றனர்.

ரமேஷின் அண்ணன் அரவிந்த்ராஜ், ரமேஷின் மனைவி சுமதி, நண்பர்கள் என்று பலரையும் நேற்று முன் தினமே போலீஸார் விசாரித்து டித்துவிட்டனர்.இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால் போலீஸார் கடுப்பாகியிருக்கிறார்கள்.

சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் காளிமுத்து ரமேஷை கண்டிப்பாகப் பிடித்துவிட வேண்டும் என்று உத்திரவிட்டு தனிப்படையையும் அமைத்துவிட்டார். அதன்பேரில் அண்ணாநகர் போலீஸ் கமிஷ்னர் சிவணான்டி , திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷ்னர் சந்திரசேகர், உதவி கமிஷ்னர்கள் மாணிக்கம், வசந்தகுமார்மற்றும் 12 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை நேற்று காலை ஆறு மணி முதல் ரமேஷை தேடும் படலத்தை ஆரம்பித்தது.

ரமேஷின் நண்பர்கள், சினிமாக கம்பெனிகள், நடிகர், நடிகைகள் என்று பலரிடமும் விசாரித்தும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. ரமேஷின் சொந்தஊரான கும்பகோணம் பகுதிகளிலும் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ரமேஷை போலீஸார் தேடுகின்றனர் என்ற பிறகும் ரமேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவது பல மர்மங்களை கிளப்பிக்கொண்டிருக்கிறது.நடிகை விஜியின் தற்கொலையின் பின்னனியில் இன்னும் பல மர்மங்கள் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

விஜி தற்கொலை செய்து கொண்டார் என்றவுடன், அவரது வீட்டிற்கு சென்ற நடிகர் விஜயகாந்த், விஜி அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார்.இந்த காதல் விவகாரம் முன்பே தெரிந்திருந்தால் சமாதானப்படுத்தி நல்ல முடிவை ஏற்படுத்தியிருப்பேன் என்று நிருபர்களிடம் தெரிவித்திருந்தார்.

விஜி எழுதி வைத்திருந்த கடிதம் உட்பட பலவற்றையும் பார்த்து கண்கலங்கிய விஜயகாந்த், நல்ல பெண் விஜி, நல்ல நடிகை. இவரது இறப்புக்குக்காரணமானவர்களை உடனே பிடிக்க வேண்டும் என்று சொன்னவர், உடனே முதல்வரிடம் பேசி, ரமேஷை எப்படியும் கைது செய்யவேண்டும் என்றுகேட்டுக்கொண்டாராம்.

அதன் பின்னரே போலீஸார் சுறுசுறுப்பாக களமிறங்கியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

நடிகை விஜி உடல் தகனம்

அவசர முடிவெடுத்து விட்டார் விஜி: விஜயகாந்த்

விஜியின் காதலர் தப்பி ஓட்டம்

3 முறை தற்கொலைக்கு முயன்றவர் விஜி

விஜியின் கண்ணீர் கடிதம்

காதல் தோல்வியால் நடிகை விஜி தற்கொலை

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil