»   »  ‘குத்துப்பாட்டு’க்கு களமிறங்கும் முன்னாள் கனவுக் கன்னிகள்...

‘குத்துப்பாட்டு’க்கு களமிறங்கும் முன்னாள் கனவுக் கன்னிகள்...

Subscribe to Oneindia Tamil

மும்பை: குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கு இப்போது இளம் நடிகைகளைத் தேடுவதில்லை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். மாறாக மூத்த நடிகைகளைத் தேடி ஓட ஆரம்பித்துள்ளனராம்.

பாலிவுட்டில் இந்த புதிய பழக்கம் தற்போது புதுக்கதையாகியுள்ளது. பல பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மூத்த நடிகைகளை ஒரு பாட்டுக்கு ஆட வைக்கும் முயற்சிகளில் தீவிரமாகி விட்டனராம்.

ஐஸ்வர்யா ராய் ராம்லீலா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடவிருப்பது இந்த புதிய தேடலின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

ராம்லீலாவில் ஐஸ்வர்யா ஐட்டம்

ராம்லீலாவில் ஐஸ்வர்யா ஐட்டம்

சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு பாட்டுக்கு ஆடவுள்ளார். இந்த செய்தி சமீபத்தில்தான் உறுதியானது.

கஜோலும் வருகிறார்

கஜோலும் வருகிறார்

இந்த வரிசையில் இப்போது இணையவுள்ளார் கஜோல். இவரும் குத்துப்பாட்டுக்கு ஆடுவதில் ஆர்வமாக இருக்கிறாராம். இந்த ஆசையை அவரே வாய் விட்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

மாதுரியின் ஏக் தோ தீன்.

மாதுரியின் ஏக் தோ தீன்.

முன்னாள் கனவுக் கன்னியான மாதுரி தீட்சித், தான் ஹீரோயினாக நடித்த படத்திலேயே ஐட்டம்டான்ஸுக்கு ஆடிய அனுபவம் கொண்டவர். தேஸாப் படத்தில் இடம் பெற்ற ஏக் தோ தீன் பாடலை மறக்க முடியுமா....

காக்ராவில் மாதுரி

காக்ராவில் மாதுரி

ஆனால் தற்போது யெ ஜவானி ஹைய் தீவானி படத்தில் காக்ரா என்ற பாடலுக்கு அவர் போட்ட குத்துப் பாட்டு புது ரகமாக அமைந்துள்ளது. இதுதான் அவர் முதல் முறையாக ஆடிய முழு அளவிலான குத்துப் பாட்டாகும். மாதுரிக்கு வயது 46.

ரன்பீருக்குப் போட்டியாக கலக்கல்

ரன்பீருக்குப் போட்டியாக கலக்கல்

இந்தப் பாடலில் ஹீரோ ரன்பீர் கபூருடன் இணைந்து, அவருக்கு இணையாக ஆடி அசத்தியிருப்பார் மாதுரி.

ரவீனா டான்டனின் சண்டிகர் கி ஸ்டார்

ரவீனா டான்டனின் சண்டிகர் கி ஸ்டார்

சண்டிகர் கி ஸ்டார் என்ற பாடலுக்கு ரவீனா டான்டன் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடியுள்ளார்.

பரினீதாவில் ரேகா

பரினீதாவில் ரேகா

பரினீதா படத்தில் முன்னாள் நாயகி ரேகா ஒரு ஐட்டம் பாட்டுக்கு ஆடினார். கெய்சி பஹலி ஜிந்தாகனி என்ற பாடல் அவரது கவர்ச்சிக்கு இன்னும் மவுசு இருப்பதை உணர்த்தியது.

இன்னும் பல மூத்த நடிகைகள் விரைவில் இந்த வரிசையில் சேர தயாராகி வருகிறார்களாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Aishwarya Rai Bachchan was recently in the news, when it was reported that she'd been signed up by Sanjay Leela Bhansali to do an item number in his next — 'Ram Leela', which has Deepika Padukone and Ranveer Singh in lead roles. We take a look at some older beauties who have sizzled onscreen in item numbers.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more