முதல் படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய சீரியல் நடிகை… வாழ்த்திய ரசிகர்கள் !

சென்னை : சின்னத்திரையில் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த, ரச்சிதா மகாலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

ரச்சிதா சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருக்கும் ரச்சிதாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ரச்சிதா மகாலட்சுமி. இந்த தொடர் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அந்த சீரியலில் உடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இளவரசி

இளவரசி

பிரிவோம் சந்திப்போம் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரில் நடித்தார். இதில், சந்தோஷி, ஸ்ரீகர், வசந்த் ஆகியோருடன் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார் ரச்சிதா.

சரவணன் மீனாட்சி சீசன்1

சரவணன் மீனாட்சி சீசன்1

காதலை மையமாகக்கொண்டு உருவான சரவணன் மீனாட்சி சீசன் 1ல் மிர்ச்சி செந்தில், ஸ்ரீஜா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த சீரியலில் நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சரவணன் மீனாட்சி சீசன்2

சரவணன் மீனாட்சி சீசன்2

சரவணன் மீனாட்சி சீசன் 1 தொடரின் வெற்றியை அடுத்து, சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடங்கப்பட்டது. இதில் ரச்சிதா, தங்க மீனாட்சி கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்து அனைவரின் மனதிலும் தனி இடம் பிடித்தார். இதில் கவின் சரவணப்பெருமாள் வேடத்தில் நடித்திருப்பார். இவர்கள் இருவரின் காதல் மிகவும் ரசிக்கும் படி இருந்ததால், இந்த சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

சரவணன் மீனாட்சி தொடரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ரச்சிதா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடி, ஜூனியர் சினியர் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். நாச்சியார் என்ற தொடரிலும் நடித்தார்.

புல்லட் பைக்

புல்லட் பைக்

புடவையில் தேவதைப்போல் வளைய வரும் ரச்சிதா, புதிதாக ஒரு புல்லட் பைக் வாங்கி இருக்கிறார். ஷோரூமில் இருக்கும்போது எடுத்த வீடியோவையும் அவர் தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

புல்லட் ராணி

புல்லட் ராணி

ஆசையா வாங்கிய புல்லட்டுல ஆசை தீரக கலக்கலாக ரவுண்ட் அடிச்ச ரச்சிதா போட்டோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயினர். ரச்சிதா அது காய்கறி பை இல்ல... புல்லட் இப்படி அலேக்கா ஓட்டுறீங்களே என்று கூறி ரச்சிதாவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். புல்லட் ரைடுக்கு தகுந்த மாதிரி ஜெர்கின் போட்டுக்கிட்டு கெத்தா போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் திறந்த வாயை மூடவில்லை. சில ரசிகர்கள் அவரை செல்லமாக புல்லட் ராணி என்று கலாய்த்தும் வருகின்றனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இத்தொடர், இல்லத்தரசிகள் விரும்பும் தொடர்களில் ஒன்றாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக பல திருப்பங்களுடன் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்த சீரியல். இவர், இந்த சீரியலிலிருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

Recommended Video

திரைப்பட நடிகைக்கு Tough கொடுக்கும் Serial நடிகை Pavani Reddy - Filmibeat Tamil
ஷூட்டிங்

ஷூட்டிங்

ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த ரச்சிதா , நடிகரும் இயக்குனருமான குருபிரசாத் நடிக்கும் கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது முதல் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருக்கும் ரச்சிதாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாணிபோஜன் பல படங்களில்

வாணிபோஜன் பல படங்களில்

வாணிபோஜன் ,பிரியா பவானி சங்கர் இவர்கள் இருவரும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு படு பிஸியாக நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X