»   »  தளபதிடா: அஜீத் மைத்துனி ஷாம்லி ஒரு தீவிர விஜய் ரசிகையாம்!

தளபதிடா: அஜீத் மைத்துனி ஷாம்லி ஒரு தீவிர விஜய் ரசிகையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் மைத்துனி ஷாம்லி தான் நடித்து வரும் வீர சிவாஜி படத்தில் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகையாக நடிக்கிறாராம்.

குழந்தை நட்சத்திரமாக ஒரு ரவுண்டு வந்த ஷாம்லி வளர்ந்த பிறகு தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேல் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

Shamili is a die hard fan of Vijay

கன்னட நடிகர் சுதீப் ஜோடியாக நடிக்க உள்ளார். ஷாம்லி தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக வீர சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கணேஷ் விநாயக் இயக்கி வரும் இந்த படத்தில் ஷாம்லி விஜய்யின் தீவிர ரசிகையாக நடிக்கிறாராம்.

படத்தில் விக்ரம் பிரபு டாக்சி டிரைவராக வருகிறாராம். மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் காமெடியில் கலக்க உள்ளார்களாம். அஜீத்தில் வீட்டில் இருந்து ஒருவர் விஜய் ரசிகையாக நடிப்பதை பார்த்தாவது அவர்களின் ரசிகர்கள் சண்டை போடுவதை கைவிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத்தும், விஜய்யும் என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டு தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith's sister-in-law Shamili is acting as a die hard fan of Vijay in her upcoming movie Veera Sivaji.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil