For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எனக்கு கொரோனான்னு தப்பா சொல்லிட்டாங்க...புலம்பும் பிக்பாஸ் பிரபலம்

  |

  சென்னை : ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவம் அடங்கவில்லை. கொரோனா தொற்றால் இதுவரை கோடிக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது மூன்றாம் அலையும் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம் என கூறப்படுகிறது.

  மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிறந்த நாள்... ஒன்று திரண்டு வாழ்த்திய திரைபிரபலங்கள் !மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிறந்த நாள்... ஒன்று திரண்டு வாழ்த்திய திரைபிரபலங்கள் !

  குறைவது போல் தோற்றம் காட்டி, மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால் பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகை நதியா போன்ற சிலர் இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திரையுலகமே கலக்கத்தில் உள்ளது.

  கொரோனான்னு தப்பா சொல்லிட்டாங்க

  இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஷெரினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தனக்கு கொரோனா என தவறாக கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

  குழப்பமான வாரம்

  குழப்பமான வாரம்

  ஷெரின் தனது பதிவில், தொடர்ந்து 2 நாட்களாக நெகட்டிவ். முதலில் பாசிட்டிவ் என கூறப்பட்டது தவறு என டாக்டர்கள் சொல்கிறார்கள். இந்த வாரம் இது நம்ப முடியாத அளவிற்கு குழப்பமான வாரம். ஆகஸ்ட் 16 ம் தேதி எனக்கு முதலில் டெஸ்ட் எடுத்த போது பாசிடிவ் என்றார்கள்.

  தனிமையில் இருக்க போகிறேன்

  தனிமையில் இருக்க போகிறேன்

  தொடர்ந்து 17 ம் தேதி டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் நெகட்டிவ் என வந்துள்ளது. இதனால் இன்று மீண்டும் டெஸ்ட் எடுக்க ஓடினேன். அதுவும் நெகட்டிவ் என்று தான் வந்துள்ளது. இப்போது வரை நெகடிவ்வாக தான் உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். பாதுகாப்பாக இருக்க இன்னும் சில நாட்களுக்கு தனிமையில் இருக்க போகிறேன். அனைவரின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவிற்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

  குழப்பமடைய வைத்த பதிவு

  குழப்பமடைய வைத்த பதிவு

  டெஸ்ட் எடுக்கப்படும் அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என சொல்லப்படுவதாக ஏற்கனவே பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது சினிமா பிரபலமான ஷெரினே அப்படி ஒரு பிரச்சனையில் சிக்கியது அனைவரையும் குழப்பமடைய வைத்துள்ளது.

  தனுஷ் பட ஹீரோயின்

  தனுஷ் பட ஹீரோயின்

  தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து விசில், ஸ்டூடண்ட் நம்பர் ஒன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக 2015 ல் நண்பேன்டா என்ற படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் ஷெரின்.

  Sherin Samayal spicy Pepper Chicken | Bigg Boss • Celebrity Cooking ° Vijay TV
  பிக்பாஸ் பிரபலம்

  பிக்பாஸ் பிரபலம்

  பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்த ஷெரினுக்கு விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு பிரபலமான ஷெரினுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாகி அடிக்கடி ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிடுவது, ரீல் வீடியோ வெளியிடுவது என இருந்து வருகிறார்.

  மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்

  மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்

  கொஞ்சி கொஞ்சி பேசும் இவரது தமிழுக்கே ரசிகர்கள் ஏராளம். தனக்கு கொரோனா என ஷெரின் சொல்லியதும் பலர் கவலை தெரிவிக்க துவங்கினர். பிரார்த்தனைகளை குவித்தனர். இப்போது கொரோனா நெகட்டிவ் என ஷெரின் கூறியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்து பலர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

  English summary
  bigg boss fame sherin sagar penned in instagram that she was tested falsely positive for covid 19. meanwhile she will continue to isolate herself for few more days just to be safe.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X