»   »  மோடி யோகாவில் பங்கேற்காமல்.. பெங்களூரில் செய்த ஷில்பா ஷெட்டி.. "சித்து"வுக்காக

மோடி யோகாவில் பங்கேற்காமல்.. பெங்களூரில் செய்த ஷில்பா ஷெட்டி.. "சித்து"வுக்காக

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பெங்களூரில் நடந்த யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு யோகா செய்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தினமும் யோகா செய்யும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்கவில்லை. அவரை பெங்களூர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட ஷில்பா பெங்களூரில் இன்று நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பெங்களூர்

10 ஆயிரம் பேருடன் யோகா செய்தது நன்றாக இருந்தது. என்ன ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினம். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள் என ஷில்பா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

யோகா

யோகா

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்கைக்கு யோகா அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஸ்பான்டிலிட்டிஸ் ஏற்பட்டபோது தான் யோகா செய்ய துவங்கினேன். ஸ்பான்டிலிட்டிஸை குணப்படுத்த முடியாது என்றாலும் யோகா மூலம் அது மீண்டும் வராமல் தடுக்க முடியும் என்கிறார் ஷில்பா.

விருக்ஷாசன்

விருக்ஷாசன் அல்லது மர போஸ் செய்தேன் என்று கூறி அந்த ஆசனம் செய்கையில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷில்பா.

நன்றி

நன்றி

எனக்கு அழைப்பு விடுத்தற்கு மாண்புமிகு முதல்வர் சித்தராமையா மற்றும் ஸ்வாஸா குருஜிக்கு நன்றி என்று ஷில்பா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Shilpa Shetty has attended yoga day celebration in Bangalore rather than at Rajpath in Delhi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil