»   »  காத்திருக்கும் ஷிவாணி

காத்திருக்கும் ஷிவாணி

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி காட்டவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவே மாட்டேன் என்று படு பிராக்டிகலாக பேசுகிறார் தண்டாயுதபாணியில் நடித்து சற்றே டல்லடித்த நிலையில் உள்ள ஷிவாணி.

20க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்தவர்தான் ஷிவாணி. ஜில்லென்ற சிரிப்புடன், படு கலகலப்பாக இருக்கும் ஷிவாணி, தண்டாயுதபாணி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

விளம்பரப் படங்களில் நடித்த அனுபவம் கை கொடுத்ததால், முதல் படத்திலேயே நடிப்பில் வெளுத்துக் கட்டி சபாஷ் ஷிவாணி என்று பாராட்டப்பட்டவர்.

வழக்கம் போல ஷிவாணிக்கும் பூர்வீகம், பூக்களின் தாயகமான கேரளாதான். இருந்தாலும் தமிழில் நடிப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்த ஷிவாணிக்கு, தண்டாயுதபாணி படத்தில் கிடைத்த வரவேற்பு பெரும் தெம்பு கொடுத்தது.

ஆனால் இப்போது தமிழில் அவரது மார்க்கெட் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் மலையாளத்திற்குத் திரும்பினார். அங்கு தற்போது வினீத்துக்கு ஜோடியாக கால் சிலம்பு என்ற படத்தில் நடிக்கிறார். அதுதவிர சிலந்தி என்ற படத்திலும் நடிக்கிறார்.

தெலுங்கிலும் பிசியாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு இரு படங்களில் நடிக்க புக் ஆகியுள்ளாராம் ஷிவாணி. இப்படி தென்னக மொழிகளில் திறமை காட்டும் வாய்ப்புகள் அதிகம் வந்தபோதிலும், அறிமுகம் கொடுத்த (அதிக காசும் கொடுக்கும்!) தமிழில்தான் நிரந்தரமாக திறமை காட்ட ஆசையாக உள்ளாராம் ஷிவாணி.

நான் நன்றாக நடிப்பேன் என்பதை தண்டாயுதபாணி மூலம் நிரூபித்தேன். நடிப்பு மட்டுமல்லாமல், கிளாமரும் எனக்குக் காட்ட வரும். கதையோடு கூடிய கிளாமருக்கு நான் எதிர்ப்பு சொல்ல மாட்டேன். கண்களைக் கவரும் வகையிலான கிளாமருக்கு நான் எதிரி அல்ல, அதேசமயம், கண்ணைக் கூச வைக்கும் வகையிலான கிளாமருக்கு நான் பச்சைக் கொடி காட்ட மாட்டேன் என்கிறார் கிறங்கடிக்கும் சிரிப்போடு ஷிவாணி.

ஷிவாணி ஆசை நிறைவேறட்டும்!

Please Wait while comments are loading...