»   »  ஷ்ரேயா ரெட்டிக்கு வெட்டிங்?

ஷ்ரேயா ரெட்டிக்கு வெட்டிங்?

Subscribe to Oneindia Tamil

திமிரு ஷ்ரேயா ரெட்டிக்கு விரைவில் கல்யாணம் நடந்தாலும் நடக்கும் என்று திரையுலகில் முனுமுனுக்குப்படுகிறது.

ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரராக பிரபலமாக திகழ்ந்த பரத் ரெட்டியின் புத்திரிதான் ஷ்ரேயா ரெட்டி. அப்பாவைப் போல கிரிக்கெட் ஆர்வம் இல்லாமல் மாடலிங் பக்கம் புகுந்தார் ஷ்ரேயா ரெட்டி.

எஸ்.எஸ்.மியூசிக்கில் கலக்கிக் கொண்டிருந்த ஷ்ரேயாவை கூப்பிட்டு தனது திமிரு படத்தில் வில்லத்தனம் காட்ட வைத்தார் விஷால். அப்படத்தில் ஷ்ரேயா போட்ட போட்டைப் பார்த்து ஓவர் நைட்டில் பிரபலமானார் ஷ்ரேயா.

அடுத்து வந்த வெயில் படத்தில் பஞ்சைப் பராரியான கோலத்தில் வந்து போனார் ஷ்ரேயா. இதிலும் கூட அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் வாய்ப்புகள் வந்து குவியவில்லை.

தனது பள்ளிக்கூடம் படத்தில் அவருக்கு அருமையான கேரக்டர் கொடுத்து நடிக்க வைத்துள்ளார் தங்கர். இதுதவிர ஷ்ரேயாவுக்கு வேறு படம் எதுவும் இல்லை.

தனக்கு பணம் முக்கியமில்லை. நல்ல கேரக்டர் கிடைத்தால்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் ஷ்ரேயா. இதனால் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் ஹாயாக இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பட நிறுவனம் ஷ்ரேயாவை அணுகியதாம். பெரிய நிறுவனம் என்பதால் அடடா, அட்டகாசமான வாய்ப்பாக இருக்கும் என்று ஆசையாக போயுள்ளார். அங்கு போன பின்னர்தான், அது குத்துப் பாட்டு வாய்ப்பு என்று தெரிய வந்ததாம்.

கடுப்பாகி விட்டாராம் ஷ்ரேயா. அந்த வேலைக்கு வேறு ஆளைப் பாருங்க என்று கோபமாக கூறி விட்டாராம். ஷ்ரேயா எதிர்பார்க்கும் அளவுக்கு கேரக்டர்கள் கிடைப்பதில் பெரும் தொய்வு நிலவுவதால், மகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடலாமா என ரெட்டியின் பெற்றோர் நினைக்கிறார்களாம்.

ஆனால் அப்பா, அம்மாவுக்கு வேலை வைக்காமல் ஷ்ரேயாவே அழகான ஒரு பார்ட்டியைப் பிடித்து வைத்துள்ளாராம். அவரிடம் பேசிப் பேசித்தான் இப்போது பொழுதையே ஓட்டிக் கொண்டிருக்கிறாராம். ஷ்ரேயாவின் மனம் குளிர்ந்த அந்த நபரே அவரைக் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறாராம்.

கூடிய விரைவில் நல்ல செய்தியா வந்து விழுமாம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil