»   »  சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!!

சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நம்ம சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்டு நடித்த ஸ்ரேயா கையில் இப்போது ஒரே ஒரு தமிழ் படம் தான். அதுவும் சிம்புவுடனான ஏஏஏ. அது எப்போது ரெடியாகும் என்பது தெரியாததால் அதற்காக காத்திருக்காமல் தனது ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ள துவங்கியுள்ளார்.

கடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்தார் (விஜய் இல்லீங்க... இது நிஜ சுறா). ஏற்கனவே அவர் கடலுக்கடியில் நீந்தும் பயிற்சிகள் பெற்றிருப்பதால் எப்படியாவது தனது எண்ணத்தை நிறைவேற்ற எண்ணினார்.

Shriya's swim with sharks

சமீபத்தில் மாலத்தீவு சென்றார் ஸ்ரேயா. அங்குள்ள கடல் பகுதியில் தனது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான நீச்சல் கவச உடைகளுடன் கடலில் குதித்து சுறாக்களுடன் பயமின்றி நீந்தி மகிழ்ந்தார்.

Shriya's swim with sharks

இதுபற்றி அவர் கூறும்போது, "தனியாக கடலுக்கு நடுவே படகு செலுத்திச் சென்றேன். பிறகு கடலில் குதித்து ராட்சத திமிங்கலம் மற்றும் சுறா மீன்களுடன் நீண்ட நேரம் நீந்தியபடி விளையாடினேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தவிர இரவு நேரத்திலும் கடலில் குதித்து நீந்தியபடி இருந்தேன். அங்கிருந்து திரும்பி வரும் எண்ணமே எனக்கு வரவில்லை. அவ்வளவு ஜாலியாக இருந்தது," என்றார்.

கொடுத்து வைத்த சுறா!

English summary
Actress Shriya has recently swimming in Maldives sea with sharks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil