மாலத்தீவில் மகளுடன் விளையாடும் ஷ்ரேயா.. பிகினியில் எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க!

சென்னை: நடிகை ஸ்ரேயா தனது 40வது பிறந்தநாளை மகள் மற்றும் கணவருடன் மாலத்தீவில் கொண்டாடி உள்ளார்.

மாலத்தீவில் பிகினி உடையில் ஸ்ரேயா சந்தோஷமாக தனது பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத நடிகை என தனது 40வது வயதிலும் நிரூபித்துள்ளார் ஸ்ரேயா.

40 வயசாகிடுச்சு

40 வயசாகிடுச்சு

2001ம் ஆண்டு இஷ்டம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா. 2003ம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானார். 1982ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி ஹரித்வாரில் பிறந்த ஸ்ரேயா தனது 40வது பிறந்தநாளை சமீபத்தில் மாலத்தீவில் கொண்டாடினார்.

மாலத்தீவில் பர்த்டே பார்ட்டி

மாலத்தீவில் பர்த்டே பார்ட்டி

இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணின் அம்மாவாக நடித்து இருந்தார் ஸ்ரேயா. சில நிமிடக் காட்சிகள் என்றாலும் அவரது நடிப்பு வேறலெவலில் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில், தனது குடும்பத்துடன் 40வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடி உள்ளார் நடிகை ஸ்ரேயா. அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.

மகளுடன் பீச்சில் விளையாட்டு

மகளுடன் பீச்சில் விளையாட்டு

தனது செல்ல மகள் ராதாவுடன் நடிகை ஸ்ரேயா மாலத்தீவு கடலில் விளையாடும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தை ஆட்சி செய்து வருகிறது. ரெண்டு பேருமே செம க்யூட்டா அழகா இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு நடிகை ஷ்ரேயாவை வாழ்த்தி வருகின்றனர்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

மாலத்தீவில் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்த ஷ்ரேயா பீச்சில் பிகினி உடை அணிந்து குளிக்கும் ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோவையும் ஷேர் செய்து ரசிகர்களை கிக்கேற்றி உள்ளார். 40 வயசு மாதிரியே தெரியல ஷ்ரேயா, சிவாஜி படத்தில் பார்த்தது போலவே அப்படியே இருக்கீங்க என நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

6 படங்கள்

6 படங்கள்

நடிகை ஸ்ரேயா இப்போதும் சினிமாவில் செம பிசியாகவே உள்ளார். த்ரிஷ்யம் 2 இந்தி திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும், காப்ஸா, மியூசிக் ஸ்கூல், தட்கா உள்ளிட்ட படங்கள் ரெடியாகி வருகின்றன. தமிழில் அவர் நடித்த நரகாசூரன் மற்றும் சண்டக்காரி உள்ளிட்ட படங்கள் பல வருடங்கள் தாமதமாகி வருகின்றன. எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X