»   »  ரகசியமாக போனவாரமே திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா!

ரகசியமாக போனவாரமே திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரேயா கல்யாணம் போன வாரமே முடிஞ்சிடிச்சு!- வீடியோ

மும்பை: நடிகை ஸ்ரேயா தனது காதலன் ஆண்ட்ரே கோஷ்சீவை (Andrei Koscheev) ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் 'சிவாஜி', 'அழகிய தமிழ் மகன்', 'கந்தசாமி' உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரேயா தனது காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவை 17, 18, 19 ஆகிய தேதிகளில் திருமணம் செய்வதாக தகவல் வெளியானது. ஆனால், முன்கூட்டியே ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக தகவல் கசிந்துள்ளது.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமாகி 'மழை', 'சிவாஜி', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'அழகிய தமிழ்மகன்', 'AAA' ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இன்னும் வெளிவராத 'நரகாசூரன்' படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

ரகசியத் திருமணம்

ரகசியத் திருமணம்

ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவ்-க்கும் மார்ச் 17, 1, 19 ஆகிய தேதிகளில் திருமணம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், ஒருவாரம் முன்னதாக மார்ச் 12-ம் தேதியன்றே ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.

மும்பையில் திருமணம்

மும்பையில் திருமணம்

இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடக்கவிருப்பதாக வந்த தகவலை ஸ்ரேயா மறுத்த நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்று திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

திருமணத்தில்

திருமணத்தில்

திரையுலகத்திலிருந்து இந்தி நடிகரான மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவரது மனைவி மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனராம். இவர்கள் ஸ்ரேயாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்கள்.

அவரே அறிவிப்பார்

அவரே அறிவிப்பார்

கடந்த பத்து நாட்களாக ட்விட்டரில் ஸ்ரேயா எந்தப் பதிவும் போடாமல் இருந்து வருகிறார். திருமண பிஸியில்தான் அவர் சமூக வலைதளங்கள் பக்கம் வரவில்லை என்கிறார்கள். விரைவில் ஸ்ரேயாவே அவரது திருமணத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actress Shriya Saran got hitched to Andrei Koscheev in a private wedding which has been planned secretly in her Mumbai residence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X