»   »  30 வது பிறந்தநாளை கண்பார்வையற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய சுருதிஹாசன்

30 வது பிறந்தநாளை கண்பார்வையற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய சுருதிஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரிகா-கமல்ஹாசன் தம்பதிகளின் அன்பு மகளான சுருதிஹாசன் இன்று தனது 30 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

1986ம் வருடம் ஜனவரி 28ம் தேதி பிறந்த சுருதிஹாசன் இன்று 30 வயதை எட்டிப் பிடித்திருக்கிறார். நடிகை, இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்ட சுருதி இன்று தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார்.

வாழ்த்து மழையில் தொடர்ந்து நனைந்து வரும் சுருதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி இங்கே பார்க்கலாம்.

7 ம் அறிவு

7 ம் அறிவு

சூர்யா- முருகதாஸ் கூட்டணியில் வெளியான 7 ம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுருதிஹாசன் தற்போது இந்தியளவில் ஒரு பிஸியான நடிகையாக பறந்து, பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

மற்ற மொழிகளில்

மற்ற மொழிகளில்

தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சுருதி நடிக்கும் படங்கள் ஹிட்டடிக்க தமிழில் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. கமலின் மகளாக இருந்தாலும் கூட நடிக்கும் படங்களில் தனக்கான கதாபாத்திரத்தை சுருதி கண்டு கொள்வதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதற்கு உதாரணமாக பூஜை, புலி, வேதாளம் போன்ற படங்களை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு தனது அடுத்தடுத்த படங்களை சுருதி தேர்ந்தெடுத்து நடிப்பாரா? என்று அவரது ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பன்முகங்கள்

பன்முகங்கள்

திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நடிக்கத் தொடங்கி தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி வருகிறார் சுருதிஹாசன். பாடகி, நடிகை,இசையமைப்பாளர் என்று பன்முகங்கள் கொண்ட சுருதி சமீபத்தில் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

ஆதரவற்ற குழந்தைகளுடன்

இன்று தனது 30 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் சுருதிஹாசன் நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் கண்பார்வையற்ற குழந்தைகளுடன் தன்னுடைய பிறந்த நாளை கேக் கொண்டாடினார். மேலும் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களையும் அவர் அளித்தார்.

அப்பா அம்மா விளையாட்டு

அப்பா அம்மா விளையாட்டு

தற்போது தந்தை கமலுடன் அப்பா அம்மா விளையாட்டு,தெலுங்கில் ஒரு படம் மற்றும் சூர்யாவின் எஸ் 3 ஆகிய படங்களில் சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுருதிஹாசன் மேலும் பல வெற்றிகளைக் குவித்திட தட்ஸ்தமிழ் சார்பாக வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுருதிஹாசன்!

English summary
Today Actress Shruti Haasan Celebrates His 30th Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous actress a wonderful birthday ahead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil