»   »  பத்து செல்ஃபி எடுத்தா ஒரு புக் படிக்கணும்.. முடியுமா? - ஸ்ருதியின் சேலஞ்ச் இது!

பத்து செல்ஃபி எடுத்தா ஒரு புக் படிக்கணும்.. முடியுமா? - ஸ்ருதியின் சேலஞ்ச் இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ரைஸ் பக்கெட் சேலஞ்ச் போல நடிகை ஸ்ருதி தனது பங்கிற்கு புதிய சேலஞ்ச் ஒன்றை அறிவித்திருக்கிறார்.

ஸ்ருதி அறிமுகப்படுத்தியிருக்கும் அந்த சேலஞ்சின் பெயர் செல்ஃபி சேலஞ்ச். இளைய தலைமுறையினர் மட்டுமின்றி மூத்த, வளரும் தலைமுறையினரும் செல்ஃபிக்கு அடிமையாகி வருகின்றனர்.

Shruti Haasan Introduce new Challenge

அது கல்யாண வீடோ, இறந்தவர் வீடோ செல்ஃபி எடுத்தே ஆக வேண்டும் என்று தீயாய் வேலை செய்பவர்களை ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி பத்து செல்ஃபி எடுத்தா ஒரு புக் படிக்கணும். முடியுமா? என்று கேட்டு புதுவகை சேலஞ்ச் ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

Amen! 👍

A photo posted by @shrutzhaasan on Jul 10, 2016 at 7:17am PDT

ஸ்ருதியின் இந்த சேலஞ்சை பார்க்கும், கேட்கும் பலரும் கண்டிப்பா முடியாது என்று 'ஜகா' வாங்கி வருகின்றனர். தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வருகையால் புத்தகம் படிக்கும் பழக்கம் மெல்ல, மெல்லக் குறைந்து தற்போது அரிதான விஷயமாக மாறிவிட்டது.

ஸ்ருதி தற்போது 'எஸ்3' மற்றும் 'சபாஷ் நாயுடு' படங்களில் மும்முரமாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Shruti Haasan Introduced new Selfie Challenge.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil