»   »  பெரிய வீட்டு வாரிசு நடிகரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்?

பெரிய வீட்டு வாரிசு நடிகரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை பிரிந்த நடிகர் ரன்பிர் கபூரும், ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிகை கத்ரீனா கைஃபை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து ரன்பிர் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

ரன்பிர், கத்ரீனா காதலை நடிகை தீபிகா படுகோனே அத்துவிட்டதாக பாலிவுட்டில் பேசப்பட்டது. தீபிகாவும், ரன்பிரும் காதலித்தபோது இடையே வந்தார் கத்ரீனா. அதனால் தீபிகா கத்ரீனாவை பழிவாங்கிவிட்டதாக கூறப்பட்டது.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

ரன்பிர் கபூரும் ஸ்ருதி ஹாஸனும் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடித்தனர். அந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் எல்லாம் வாவ், இந்த ஜோடி சூப்பராக இருக்கே என்றார்கள்.

காதல்

காதல்

விளம்பர படத்தில் நடித்தபோது ரன்பிர் கபூருக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி காதலாகிவிட்டதாம். விளம்பர படத்தில் நடித்து முடித்த பிறகு இருவரும் டச்சில் இருந்தார்களாம்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

கத்ரீனாவை பிரிந்த ரன்பிர் அடுத்த காதலை கண்டுபிடித்துவிட்டார். இது உண்மையா என்பதை ஸ்ருதி ஹாஸன் தான் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் பாலிவுட்டில் இது எல்லாம் சகஜமப்பா என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

English summary
According to the latest reports by a leading English daily, Ranbir Kapoor has already found the new love of his life and she is none other than Shruti Haasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil