»   »  பிரேமம் ரீமேக்: மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்... பதிலடி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்

பிரேமம் ரீமேக்: மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்... பதிலடி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ருதிஹாசன் நடிக்கும் பிரேமம் தெலுங்கு ரீமேக் படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளது. இந்த படங்களுக்கு மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் இந்த கிண்டல்கள் தன்னை பாதிக்காது என்று பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன்

பிரேமம் மலையாள திரைப்படம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். இவர்களில் நாக சைதன்யாவைவிட ஸ்ருதி 10 வயது இளையவர். கல்லூரி ஆசிரியையாக நடிக்கும் ஸ்ருதியை மாணவர் நாக சைதன்யா காதலிப்பதுபோல் கதாபாத்திரம் அமைந்துள்ளது.

கிளாமர் வேடங்களில் நடித்துவரும் ஸ்ருதிக்கு ஆசிரியை வேடத்தில் அடக்க ஒடுக்கமாக நடிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் அந்த வேடம் தனக்கு பொருந்துமா என்பதை அறிய ‘பிரேமம்' படத்தை பார்த்தார். கதாபாத்திரம் பிடித்திருக்கவே நடிக்க ஒப்புக்கொண்டார்.இந்த பாத்திரத்துக்காக முற்றிலும் மேக்அப் போடாமல் நடிக்கிறார் ஸ்ருதி.

இந்தப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் காட்டன் சேலை உடுத்தி நடிக்கிறார். இதற்கான தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதுபற்றி வீட்டில் அவர் அணிந்து பார்த்து தனக்கு சரிப்பட்டு வரும் என்ற பிறகே நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்களின் புலம்பல்

நெட்டிசன்களின் புலம்பல்

ஸ்ருதிஹாசன் பிரேமம் தெலுங்கு ரீமேக்கான மஜ்னு படத்தில் மலர் டீச்சராக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியான நாளில் இருந்து தொடர்ந்து தமிழ் ரசிகர்களும், தெலுங்கு சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த மலர் டீச்சர்

ரசிகர்களை கவர்ந்த மலர் டீச்சர்

மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி தமிழ்பெண். இவர் இதற்கு முன் சிறு வேடங்களில் நடித்தாலும் அதிகம் யாருக்கும் தெரியவில்லை. அவரை முதன் முதலில் பார்க்கும் போதே சேலையில் குடும்பப் பாங்காக பார்த்ததால் மலையாள சேட்டன்களை அதிகம் கவர்ந்து விட்டார்.

மேக் அப் இல்லாத மலர்

மேக் அப் இல்லாத மலர்

ப்ரேமம் படத்தில் சாய் பல்லவியின் தோற்றம் மிக முக்கிய காரணம், முகப்பருக்களுடன் மேக் இல்லாமல் எதார்த்தமான தோற்றத்துடன் உண்மையாகவே மாஸ்டர்ஸ் முடித்தவுடன் பணியில் சேர்ந்திருக்கும் லெக்சரரைப்போலவே இருந்தார். ஸ்ருதியும் மேக் அப் இல்லாமலேயே மஜ்னுவில் நடித்து வருகிறாராம்.

கவர்ச்சி நாயகி ஸ்ருதி

கவர்ச்சி நாயகி ஸ்ருதி

ஸ்ருதி ஹாசன் 9 படங்களுக்கு மேல் தெலுங்கில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். அதுவும் அதிரடி கிளாமர் நாயகியாவே தெலுங்கு ரசிகர்களிடம் அறிமுகமாகியுள்ளார் ஸ்ருதி. கடைசியாக அவரின் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த 'ஶ்ரீமந்துடு' படத்திலும் ஹோம்லியான ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்த படமான ப்ரேமம் ரீமேக்கில் மலர் டீச்சரின் கேரக்டரில் ஹோம்லியாக நடித்து தனது இமேஜை தக்க வைப்பார் என தெரிகிறது.

ஏற்க மறுக்கும் ரசிகர்கள்

மலர் டீச்சராக ஸ்ருதிஹாசனை பலரும் ஏற்க மறுத்து வருகின்றனர். மஜ்னு படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் லீக் ஆகவே ரசிகர்கள் பலரும் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இதெல்லாம் செட் ஆகதே என்றும் கூறியுள்ளனர்.

சோனியாகாந்தி ஸ்ருதி ஹாசன்

மீம்ஸ் போட்டுள்ள பலரும் ஸ்ருதிஹாசனை சோனியாகாந்தியுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்.

ஏன் இந்த கொலை வெறி

சாய் பல்லவி மீது ஏன் இந்த காதல்? ஸ்ருதி ஹாசன் மீது ஏன் இத்தனை வெறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஒருவர் சமூகவலைத்தளவாசி.

ஹோம்லி லுக்

ஹோம்லி லுக்

சாய் பல்லவியை அப்போதுதான் ஃப்ரேமில் ஃப்ரெஷ்ஷாக ரசிகர்கள் பார்த்தார்கள். பார்த்த நொடியிலேயே தமிழ், மலையாள ரசிகர்கள் மனதைப் பறிகொடுத்துவிட்டார்கள். ஸ்ருதியை கவர்ச்சி நாயகியாக பார்த்தவர்கள் ஹோம்லியாக பார்க்க ரசிகர்கள் மறுக்கின்றனர்

அசராத ஸ்ருதி

அசராத ஸ்ருதி

அதேநேரத்தில் சமூக வலைத்தளங்களில் கிண்டலாக வெளியாகும் மீம்ஸ்கள் தன்னை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த கதாபாத்திரம் நீண்ட நாட்கள் எனக்கு கிடைத்திருக்கும் அருமையான ஒன்று. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். 'த்ரிஷ்யம்' தமிழில் ரீமேக் ஆகியபோது மோகன்லால் போல் கமலால் நடிக்க முடியாது என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் அசத்திவிட்டார் கமல். அப்பா வழியில் மகளும் அசத்துவாரா என்பதை பார்க்க காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

English summary
However, Shruti is getting a lukewarm response from the audience after some photos of the actress from the sets were leaked online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil