For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நயன்தாரா, அனுஷ்கா பாணியில் மீண்டும் தமிழில் களமிறங்கும் ஸ்ருதிஹாசன்

  |

  சென்னை : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பெரிய ஸ்டாரான நடிகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர். சமீப காலமாக இவர் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.

  கடைசியாக தமிழில் எஸ்.பி.ஜெனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஸ்ருதி தற்போது தெலுங்கில் செம பிஸியாக நடித்து வருவதால் தான் தமிழ் படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை என சொல்லப்படுகிறது.

  அதுமட்டுமல்ல மியூசிக் ஆல்பம் உள்ளிட்ட பல வேலைகளில் ஸ்ருதி பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் ஸ்ருதிஹாசன் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

  காதலரை கடுப்பேற்றிய ஸ்ருதிஹாசன்... இப்படி பண்ணா எப்படி? காதலரை கடுப்பேற்றிய ஸ்ருதிஹாசன்... இப்படி பண்ணா எப்படி?

  மீண்டும் தமிழ் படத்தில் ஸ்ருதிஹாசன்

  மீண்டும் தமிழ் படத்தில் ஸ்ருதிஹாசன்

  அது உண்மை தானாம். யாமிருக்க பயமேன் படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமான டைரக்டர் டீகே இயக்கும் புதிய படத்தில் தான் ஸ்ருதிஹாசன் நடிக்க போகிறாராம். இந்த படம் பற்றிய அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் ஜுலை மாத துவக்கத்தில் டீகே - ஸ்ருதி இணையும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

   ஷுட்டிங் எப்போ தெரியுமா

  ஷுட்டிங் எப்போ தெரியுமா

  இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் இந்த படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம். ஸ்ருதியிடம் டீகே கதையை விரிவாக விளக்கி உள்ளார். இந்த கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனே இந்த படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஓகே சொல்லி விட்டாராம். இந்த படத்தின் கதை முழுவதும் ஸ்ருதிஹாசனின் கேரக்டரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டுள்ளதாம். இதுவரை இப்படி ஒரு ரோலில் தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்தது கிடையாது என சொல்லப்படுகிறது.

  நயன், அனுஷ்கா பாணியில் ஸ்ருதி

  நயன், அனுஷ்கா பாணியில் ஸ்ருதி

  சில தோல்வி படங்கள், படங்களில் தங்கள் கேரக்டருக்கான முக்கியத்துவம் குறைவது அல்லது கவர்ச்சிக்காக மட்டும் தங்களின் ரோல் அமைக்கப்பட்டது போன்ற நிலை ஏற்பட்ட போது நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி போன்றவர்கள் பெண்களை மையப்படுத்திய கதைகளை அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கினர். அதற்கு பிறகு அவர்களின் ரேஞ்ச் சினிமாவில் எங்கோ போய் விட்டது. தற்போது இதே ஸ்டையிலை தான் ஸ்ருதிஹாசனும் கையில் எடுத்துள்ளார்.

  தெலுங்கில் செம பிஸி

  தெலுங்கில் செம பிஸி

  ஸ்ருதிஹாசன் - டீகே இணையும் படத்தில் நடிப்பதற்காக கோலிவுட்டின் பெரிய பிரபலமான பல நடிகர், நடிகைகளின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனவாம். தற்போது ஸ்ருதிஹாசன் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக என்பிகே 107, சாலர் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக என பல படங்களில் நடித்து வருகிறார். இதே போல் டீகேவும் கருங்காப்பியம் என்ற மல்டி ஸ்டாரர் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

  டைரக்டரும் பிஸி தான்

  டைரக்டரும் பிஸி தான்

  கருங்காப்பியம் படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர ஈரான் நாட்டை சேர்ந்த நொய்ரியா என்பவரும் நடிக்கிறாராம். இந்த படத்தின் மூலம் ஈரான் நடிகை முதல் முறையாக கோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார்.

  Recommended Video

  Vikram படம் BlockBuster-க்கும் மேல! Devi Sri Prasad | Kamal Haasan *Kollywood | Filmibeat Tamil
  ஜுலையில் ஸ்ருதி பட அறிவிப்பு

  ஜுலையில் ஸ்ருதி பட அறிவிப்பு

  ஸ்ருதி, டீகே இருவரும் பிஸியாக இருப்பதால் படத்தின் தேதி, லொகேஷன் போன்ற ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறதாம். இவை முடிவு செய்யப்பட்டதும் ஜுலையில் படத்தின் அறிவிப்பை வெளியிட போகிறார்களாம். தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் படங்களின் வேலைகள் முடிந்ததும் தங்களின் புதிய பட வேலைகளை துவங்க போகிறார்களாம்.

  English summary
  According reports, Shrutihaasan to team up with director Deekay in new tamil project. This was female centric movie. Movie of the story is around Shruti character. Big actors from kollywood are consider for this movie. Official announcement of the movie will expected on July.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X