விநாயகர் சதுர்த்தி கூட்ட நெரிசலில் சிக்கிய ஜான்வி கபூர்.. ஹீரோ என்ன வேலை பார்த்து இருக்காரு பாருங்க!
மும்பை: சமீபத்தில் தான் நடிகை ஜான்வி கபூர் வருண் தவான் உடன் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷனுக்கு வரும் போது அவரது மார்பை தெரியாத்தனமாக காவலர் ஒருவர் இடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், பரம் சுந்தரி நடிகை சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலுக்கு பயங்கர மக்கள் வெள்ளத்துடன் செல்ல அவரை கூட்டத்தினர் இடிக்காத வண்ணம் பின்னாடியே சென்று பாடிகார்ட்டாகவே மாறிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
பொதுவாக நடிகர்கள் வெளியே வந்தாலே பெரியளவில் கூட்டங்கள் சேர்ந்து விடும். நடிகைகள் கடை திறப்பு விழாக்களுக்கும், இப்படி கோயில் திருவிழாக்களுக்கும் வந்தால் சொல்லவா வேண்டும். கனவு கன்னிகளை கண்முன்னே பார்த்தால் இளைஞர்கள் கன்ட்ரோல் இழந்து விடுகிறார்கள்.

உரிய பாதுகாப்புடனே பரம் சுந்தரி படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பொது இடங்களுக்குச் சென்று மக்களுடன் மக்களாக ப்ரோமோஷன் செய்து வரும் ஜான்வி கபூர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலிலும் கலந்துக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
பரம் சுந்தரி வெளியானது: துஷார் ஜலோதா இயக்கத்தில் கியாரா அத்வானி கணவர் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடித்துள்ள பரம் சுந்தரி படத்தில் ஜான்வி கபூர் தான் ஹீரோயின். மலையாள நடிகைகளே கிடைக்கவில்லையா? என சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், நான் பாதி தமிழச்சி, பாதி மலையாளப்பெண் என ஜான்வி கபூர் விளக்கம் கொடுத்திருந்தார். லேட்டஸ்ட் சென்னை எக்ஸ்பிரஸ் படமா என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வரும் நிலையில், இன்று பரம் சுந்தரி படம் வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் ஜான்வி கபூர்: தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்திய போட்டோக்களை மூக்குத்தி அணிந்த முகத்துடன் ஜான்வி கபூர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் சிலையை வணங்க மக்களுடன் மக்களாக கூட்டத்தில் ஜான்வி கபூர் சென்ற நிலையில், பெருங்கூட்டம் காரணமாக யாருமே ஜான்வி கபூரை இடிக்காத வண்ணம் கியாரா அத்வானியின் கணவர் சித்தார்த் மல்கோத்ரா கவனித்துக் கொண்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
ஜான்வி கபூருக்கு வெற்றி கிடைக்குமா?: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி மற்றும் தெலுங்கில் ரொம்பவே பிசியான நடிகையாக மாறியுள்ளார். அவரது நடிப்பில் இன்று வெளியாகி உள்ள பரம் சுந்தரி படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேவரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், பரம் சுந்தரி மற்றும் அடுத்து ராம் சரணுடன் வெளியாகவுள்ள பெத்தி உள்ளிட்ட படங்கள் ஜான்வி கபூருக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











