»   »  சொப்ன சுந்தரியான ஜூ.சி.

சொப்ன சுந்தரியான ஜூ.சி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜூனியர் சில்க்...

முழு ஆங்கிலத்தில் இருந்த தனது பெயரை இப்போது செந்தமிழுக்கு மாற்றிவிட்டார். இவரது புதிய நாமகரணம், சொப்ன சுந்தரி.

கவர்ச்சி நாயகியாக வேண்டும் என்ற கனவுடன் யாரும் கோடம்பாக்கத்திற்கு படையெடுப்பதில்லை. ஜூனியர் சில்க்கும் அப்படித்தான்.கதாநாயகியாக ஆகியே தீருவது என்று முடிவுடன் சென்னை வந்தவருக்கு குத்து பாடல்கள் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

சரி கிடைத்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்று களத்தில் குதித்தவருக்கு அதுவே நிரந்தரமாகிப் போனது. கும்மாங்குத்துபாடல்களில் தொடர்ந்து தலைகாட்டியவர் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கவர்ச்சி பீரங்கியாக மேடைகளில் ஆட்டமாடிவாக்கு சேகரித்தார். அதில் கொஞ்சம் துட்டு பார்த்தார்.

ஆனால், ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட கோலிவுட்டுக்கு ஒரு நாளைக்கு 40, 50 பேர் பஸ்களில் வரிசையாக வந்து இறங்கிக்கொண்டிருப்பதாலும் கதாநாயகிக்கு மட்டுமல்லாது, குத்து பாடலுக்கு ஆடுவதற்கும் மும்பையிலிருந்து பெண்களை இறக்குமதி செய்யும்பழக்கம் கோலிவுட்டில் அதிகமாகிப் போய்விட்டதாலும் ஜூனியர் சில்க்குக்கு இப்போதெல்லாம் கையில் வாய்ப்புகள் இல்லை.

வாய்ப்பு இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்த ஜூனியர் சில்க்கிடம் யாரோ ஒரு நியூமராஜலஜி ஆசாமி, உனது பெயரில் வாஸ்துசரியில்லை, அதை மாற்றினால் சரியாகி விடும் என்று கூற, அதை நம்பி ஜூனியர் சில்க்கும் தனது பிறந்த நாள், நட்சத்திரம், ராசியைவைத்து தனக்கு புதுப்பெயர் சூட்டும் முடிவுக்கு வந்துள்ளார்.

அப்படி இப்படி என பல மாடலான பெயர்களை எல்லாம் வைத்துப் பார்த்தும் நியூமராஜிப்படியான பொறுத்தம் கூடி வரவில்லையாம்.

இதையடுத்து அக் மார்க் தமிழ்ப் பெயர்களை முயற்சித்திருக்கிறார்கள். அப்படி வந்து மாட்டியது தான் சொப்னசுந்தரி.

தற்போது கைவசமிருக்கும் ஒரே படமான கரகாட்டக்காரி படத்தை முடித்து விட்டு, சொப்னசுந்தரி என்ற பெயரில் உலா வரப் போகிறாராம்ஜூனியர் சில்க்.

கரகாட்டக்காரி என்றதும்தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தது குஷ்பு, அவர்விலகிக் கொள்ள இப்போது ரோஜா நடிக்கிறார்.

இவரைத் தவிர இன்னபிற கரகாட்டக்காரிகளாக நடிக்க இருப்பது விலாசினி, சொப்னசுந்தரி என்ற ஜூ. சில்க் ஆகியோர்.

கதாநாயகி வாய்ப்புக்காக சினிமாக் கம்பெனிகளில் படையெடுத்து, படையெடுத்து நொந்து போனவர்தான் விலாசினி. பிறகு கைவசம்இருந்த சொத்தையெல்லாம் அடமானம் வைத்து அங்கே இங்கே கடன் வாங்கி இப்போது கரகாட்டக்காரி படத்தை தயாரித்து வருகிறார்.

படத்தில் கதாநாயகியும் இவர் தானாம். இவருக்கு அம்மாவாகத்தான் ரோஜா நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

கரகாட்டக்காரியில் அட்டகாசமான ஒரு காதல் ஜோடி உள்ளதாம். அது வினுச்சக்கரவர்த்தியும், வடிவுக்கரசியும்தான். இந்தப் படத்தில்இருவரும் 40 வருடமாக காதலிக்கும் கேரக்டரில் நடிக்கிறார்கள். இரண்டு ஊர் பிரச்சனை காரணமாக இவர்களது திருமணம் நின்றுபோய்விடுகிறதாம்.

ஒரு வழியாய் 40 வருடம் கழித்து ஊர் பிரச்சனை தீர்ந்த பிறகு இருவரும் ஒன்று சேர்வது போல் கதையாம்.

40 வருடத்தில் நாடுகளே ஒன்றாய் சேரும்போது.. ஒரு ஜோடி சேருவதில் தப்பில்லையே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil