»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

திருமணத்துக்குப் பின் நடிகை சிம்ரன் தனது கணவருடன் உதயா படப்பிடிப்புக்காக சென்னை வந்தார்.

குஷ்புவுக்குப் பின் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். தனது இடுப்பழகினாலும், துள்ளலான ஆட்டத்தினாலும், எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட கையாளும் லாவகத்தாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார் சிம்ரன்.

கடந்த டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு, காதலர் தீபக்கை மணந்தார். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவிக்கவும் செய்தார். விஜய்யுடன் நடித்து வந்த உதயா படத்தை பாதியில் விட்டுவிட்டுப் போனார்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் நீதிமன்றம் போனதால், மீண்டும் அரிதாரம் பூசும் நிலைக்கு ஆளானார் சிம்ரன்.

உதயா படப்பிடிப்பு இன்று காலை கேம்பகோலா மைதானத்தில் தொடங்கியது. அதில் சிம்ரன் கலந்து கொண்டார். அவரது கணவர் தீபக் உடன் வந்திருந்தார்.

படப்பிடிப்பின்போது நிருபர்களுக்குப் பேட்டியளித்த சிம்ரன் கூறியதாவது:

கணவர் எப்படியிருக்க வேண்டும் நான் எதிர்பார்த்தது போலவே தீபக் எனக்கு வாய்த்துள்ளார். திருமண வாழ்வில் சந்தோஷமாக இருக்கிறேன். எனது திருமண முடிவு சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

திரையுலகை விட்டு நான் விலகவில்லை. சமீபத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து நடிப்பது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த தமிழ் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil