»   »  ஜீனியஸுடன் இணையப் போகிறேனே.. டிவிட்டரில் உற்சாகம் காட்டும் திரிஷா!

ஜீனியஸுடன் இணையப் போகிறேனே.. டிவிட்டரில் உற்சாகம் காட்டும் திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷா- வருண் மணியன் கல்யாணம் நின்னு போச்சாமே என்று ஏகத்துக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் அதைப்பற்றி எல்லாம் கவலையில்லாத த்ரிஷா தன்னுடைய அடுத்த படம் பற்றிய செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜீனியஸ் இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறேன் என்பதுதான் த்ரிஷாவின் சமீபத்திய ட்விட்டர் பதிவு. இதனை நடிகை சமந்தாவும் ரீடிவிட் செய்துள்ளார்.

செல்வராகவன் இயக்கி கடைசியில் வெளிவந்த படம் இரண்டாம் உலகம். இந்தப்படம் அட்டர் ப்ளாப் ஆகவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் மீண்டும் பழைய உற்சாகத்துடன் படம் இயக்கவிருக்கிறார்.

சிம்பு- த்ரிஷா- டாப்ஸி

சிம்பு- த்ரிஷா- டாப்ஸி

செல்வராகவன். இப்படத்தில் த்ரிஷா மற்றும் டாப்ஸி இருவரும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

அலை', ‘விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு சிம்புவும், த்ரிஷாவும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.

ஜெகதிபாபு

ஜெகதிபாபு

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் ‘ஜெகதிபாபு நடிக்கவிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

ட்விட்டரில் த்ரிஷா உறுதி

இதுகுறித்து த்ரிஷா தனது டுவிட்டரில், ஜீனியஸ் இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ரத்தா?

திருமணம் ரத்தா?

த்ரிஷா - தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திருமணம் கூட ரத்தாகிவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், த்ரிஷாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
After the success of Tamil romantic-drama Vinnaithaandi Varuvaaya, actor Simbu and Trisha Krishnan are teaming up again for yet-untitled Tamil project to be helmed by filmmaker Selvaraghavan. Trisha confirmed her Twitter page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil