»   »  காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்

காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியில் வெளியான மர்தாணி படத்தில் ராணி முகர்ஜி எப்படி தில்லான போலீஸ் அதிகாரியாக வந்தாரோ அதே போன்று சிம்ரனும் புதிய படம் ஒன்றில் காக்கிச் சட்டை அணிந்து நடிக்க உள்ளார்.

திருமணம், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட்ட சிம்ரன் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தன்னைத் தேடி வரும் படங்களில் எல்லாம் நடிக்காமல் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

அவர் கடைசியாக த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சிம்ரன்

சிம்ரன்

குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிம்ரன் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அவரின் ஆசையை அவரது கணவர் தீபக் நிறைவேற்றி வைக்க உள்ளார்.

புதிய படம்

புதிய படம்

சிம்ரன் நடிக்கும் புதிய படத்தை விளம்பரப் படங்கள் எடுத்து வரும் கௌரி ஷங்கர் இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா பட இயக்குனர் ஆகிறார்.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

சிம்ரன் தயாரித்து நடிக்கும் இந்த படத்தில் அவர் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இந்தியில் ராணி முகர்ஜி நடிப்பில் மர்தாணி படம் வெளியானது. அந்த படத்தில் ராணி தில்லான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சிம்ரனும் தனது படத்தில் ராணி போன்று பயமறியா போலீஸ் அதிகாரியாக வருவாராம்.

வில்லன்

வில்லன்

சிம்ரனுக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிம்ரன் கையால் அடி வாங்கப் போகும் அந்த வில்லன் யாரோ?

English summary
Simran is set to return as the leading lady of Kollywood by acting in a Mardaani like cop movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil